எனது அடுத்த டார்கெட் அஜீத்-விஜய்தான்! -சொல்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்
அட்டகத்தி படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதன்பிறகு விஜயசேதுபதி நடித்த ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் ஆகிய படங்களில் நடித்த அவர், இப்போது திருடன் போலீஸ், காக்கா முட்டை ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த படங்களில் தனது ரோல் பற்றி அவர் கூறுகையில், எனது முந்தைய படங்களில் வில்லேஜ் வேடங்களில் நடித்த நான், இப்போது காக்கா முட்டை படத்தில் ஸ்லம் பெண்ணாக நடிக்கிறேன். ஆனால், திருடன் போலீஸ் படத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் திரிஷா நடித்தது போன்று மாடர்ன் பெண்ணாக நடிக்கிறேன்.
அதனால் இதுவரை கிராமத்து பெண்ணாக என் மீது விழுந்திருந்த இமேஜை இந்த படம் உடைத்து விட்டு, என்னையும் மாடர்ன் வேடங்களுக்கு ஏற்ற நடிகையாக மாற்றி விடும் என்கிறார்.
அவரிடத்தில் சினிமாவில் உங்களது அடுத்த டார்கெட் என்ன? என்று கேட்டால், இதுவரை நடித்த படங்களில் எந்த மாதிரியான வெயிட்டான வேடத்திலும் என்னால் நடிக்க முடியும் என்பதை நிரூபித்து விட்டேன். அதனால், இனி முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். அந்த வகையில், அஜீத்-விஜய் இருவரும்தான் எனது டார்கெட்டாக உள்ளனர். நான் எதிர்பார்க்காத அளவுக்கு வெயிட்டான வேடங்களை என்னை நம்பி கொடுத்த டைரக்டர்கள், அஜீத், விஜய்யுடனும் என்னை கூடிய சீக்கிரமே டூயட் பாட வைப்பார்கள் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன் என்கிறார்.

No comments: