Header Ads

பேஸ்புக்கில் மலர்ந்த காதல்; பொய் சொன்ன கள்ளக்காதலியை கொலை செய்துவிட்டு வாலிபர் தற்கொலை

கல்லூரி மாணவியை கற்பழிக்க முயன்றதாக புகார் கூறப்பட்ட அரசு பஸ் கண்டக்டர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொணடார்.
இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–
கண்டக்டர்
தட்சிண கன்னட மாவட்டம் எல்லாப்பூரை சேர்ந்தவர் கமலாகர் மாதவநாயக்(வயது 33). இவர் கே.எஸ்.ஆர்.டி.சி(அரசு) பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். நேற்று கமலாகரின் குடும்பத்தினர் வெளியே சென்றிருந்தனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த கமலாகர் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி அறிந்ததும் எல்லாப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கமலாகரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
கற்பழிப்பு புகார்
விசாரணையில், கும்ட்டா அருகே குப்பணகெரே கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவி அனிதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) கமலாகரின் தூரத்து உறவினர் ஆவார். இந்த நிலையில், அனிதாவை கமலாகர் கற்பழிக்க முயன்றதாகவும், இதனால் அந்த மாணவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது. தற்போது அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மாணவியின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மாணவியின் இந்த நிலைமைக்கு கமலாகர் தான் காரணம் என்று அனிதாவின் பெற்றோர் கும்ட்டா போலீசில் புகார் கொடுத்திருந்தனர். இதன் காரணமாக மனம் உடைந்த கமலாகர் தற்கொலை செய்தது தெரியவந்து உள்ளது. இந்த சம்பவங்கள் குறித்து எல்லாப்பூர் மற்றும் கும்ட்டா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Powered by Blogger.