மும்பையிலிருந்து பறந்து வந்து தண்ணிப்பார்ட்டி வைத்த பிரபுதேவா!
முதல் மனைவி ரமலத்துக்கும், இரண்டாவது மனைவியாகவிருந்த நயன்தாராவுக்கும் இடையில் மாட்டிக்கொண்டு சிக்கிச் சின்னாபின்னமான பிரபுதேவா, சென்னையைவிட்டு மும்பையில் செட்டிலானார். அதன் பிறகு நயன்தாராவும் கையைவிட்டுப்போனது தனிக்கதை. மும்பையில் செட்டிலான பிறகு தமிழ்ப்படங்களை இயக்குவதை மறந்து ஹிந்திப்படங்களிலேயே கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார் பிரபுதேவா. அதனால் சென்னைக்கும் வருவதே இல்லை.
இந்நிலையில், என்னநினைத்தாரோ தெரியவில்லை..சில தினங்களுக்கு முன் திடீரென்று சென்னைக்கு விசிட் அடித்தார். சென்னைக்கு வந்ததும் தனக்கு நெருக்கமான சிலருக்கு மட்டும் விருந்து கொடுக்க எண்ணி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று நடிகர் விஜய், இயக்குநர் ஷங்கர், நடிகர் சித்தார்த், நாசர் உட்பட நட்சத்திரப் பட்டாளமே திரண்டு வந்திருக்கிறது. ஆட்டம் பாட்டம் என அமர்க்களப்பட்ட பிரபுதேவாவின் தண்ணிப்பார்ட்டி விடிய விடிய நடந்ததாம். சீனியாரிட்டி கருதி ஷங்கர், நாசர் போன்றவர்களை ஒருமாக உட்கார வைத்துவிட்டு விஜய், சித்தார்த் போன்ற யூத்கள் பார்ட்டியை களைகட்ட வைத்திருக்கிறார்கள்.
.jpg)
No comments: