Header Ads

டைட்டீல் பிரச்னை! உஷாரான ஏ.ஆர்.முருகதாஸ்!!

ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் இணைந்த முதல் படம் துப்பாக்கி. மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பு, முஸ்லீம் அமைப்புகள் தங்களை தீவிரவாதிகளாக சித்தரித்திருப்பதாக போர்க்கொடி பிடித்தன. அதையடுத்து, நடந்த சில சுற்று பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து பிரச்னை சுமூகமாக முடிவுக்கு வந்தது.

ஆனால், ஆரம்பத்திலிருந்தே படத்தின் டைட்டில் பிரச்னை விஸ்வரூபமெடுத்து வந்தது. கள்ளத்துப்பாக்கி என்ற படத்தை இயக்கிய நிறுவனம், விஜய் படத்துக்கு இந்த டைட்டீலை கொடுத்தால் எங்கள் படத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று தொடர்ந்து கொடி பிடித்து வந்தனர். அதனால் பெரிய தலைவலியில் இருந்த முருகதாஸ் ஒருவழியாக கடைசி நேரத்தில் சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாக பேசி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அதன்காரணமாக, இப்போது விஜய் நடிக்கும் படத்துக்கு கத்தி என்று பெயர் வைத்திருப்பவர், இதே டைட்டீல ஏற்கனவே குணசேகர் என்றொரு தெலுங்கு டைரக்டர் சேம்பரில் பதிவு செய்து வைத்திருப்பதை அறிந்துள்ளார். ஆனால் அது காலாவதியாகி விட்ட்து என்றபோதும், இப்போது அமைதியாக இருந்து விட்டு படம் திரைக்கு வரும் நேரத்தில் பிரச்னை செய்வார்கள் என்பதால் உஷாராகி விட்டார். அதாவது, அந்த டைட்டீலுக்கு நெகடீவ் உரிமையையும் தானே வாங்கி விட்டார். அதனால் குணசேகர் உள்பட வேறு யாரும் இனி கத்தி டைட்டீலுக்கு உரிமை கோர முடியாதாம்.

No comments:

Powered by Blogger.