அம்மனுக்கு சிபாரிசு செய்யும் காமெடி புயல்
டான்ஸ் ஆடும் தாடி இயக்குனர் அடுத்து தமிழில் காமெடி புயலை வைத்து படம் இயக்க போறது உறுதியாயிடுச்சாம். புயலுக்கு ஜோடியாக மும்பையிலேருந்து ஒரு புது ஹீரோயினை கொண்டு வர்றதுக்கு தாடி இயக்குனர் ஏற்பாடு பண்ணிக்கிட்டிருந்தாராம். ஆனால் புயலோ, காமெடிராமன் படத்துல தன்னோடு ஜோடியாக நடிச்ச மதுரை அம்மன் பெயர் கொண்ட நார்த் இண்டியன் நடிகையை சிபாரிசு செய்யுறாராம். "எல்லா நடிகையும் என்னோட நடிக்கிறதுக்கு பயந்து ஓடினப்போ இந்த முகத்தை பார்த்த பிறகும் நடிச்ச பொண்ணு அதுக்குத்தான் அடுத்த சான்ஸ் கொடுக்கணும்"னு புயல் சொல்றாராம்.
இதற்கிடையில ஆட்ட இயக்குனருக்கும், புயலுக்கும் பெருந் தொகை சம்பளமாக கொடுக்க முன்வந்த கார்பரேட் கம்பெனியும், காமெடி ராமன் கலெக்ஷனை பார்த்துட்டு போர்ட் மீட்டிங் போட்டு டிஷ்கசன் பண்ணிக்கிட்டிருக்காம்.

No comments: