Header Ads

நாங்கள் சாகும் நிலையில் உள்ளோம் எங்களை காப்பாற்றுங்கள் .முன்னாள் போராளிகளின் அவசர வேண்டுகோள் [காணொளி இணைப்பு]

போரால் பாதிக்கப்பட்ட எம் ஈழத்து உறவுகள் இன்று படும் துயரங்கள் சொல்லில்
அடங்கா சொத்திழந்து சுகமிழந்து சொந்தமிழந்து அரவணைக்க நாதியற்று இன்னமும் மீண்டு வர முடியாது தத்தளித்துக் கொண்டுள்ளார்கள்.
ஒரு வேளை சாப்பாட்டிற்கு கூட மற்றவர் கையை எதிர்பார்க்கும் நிலையே இக் குடும்பத்திற்கு. இறுதிக் கட்ட போரில் தொடங்கிய இவர்கள் துன்பம் இன்றும் முடிந்தபாடில்லை.இரு சிறு பிள்ளைகளுடன் வாழ்க்கையை கொண்டு நடாத்த முடியாது திண்டாடிக் கொண்டுள்ளார்கள்.
இருவருமே பரளைஸ் [இடுப்புக்கு கீழ் இயங்காத நிலை] நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் சுய தொழில் செய்ய இயலாத நிலை இச் சந்தர்ப்பத்தில் தான் ttnnews நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு கேட்ட போது எம் தளத்தினூடாகவே உதவிகளைப் பெற்று கொடுத்திருந்தோம். ஒருவர் இரு மாதங்களும் ஜெர்மனியிலிருந்து மற்றுமொரு உறவு ஒரு தொகைப் பணத்தையும் கொடுத்திருந்தார்கள்.
மனிதனாய் பிறந்து விட்டால் உணர்வுகளும் கூடவே ஒட்டிக் கொள்ளும் ஆனால் இவர்கள் வாழ்வில் நடந்ததோ வேறு மலம்.சலத்தையும் படுக்கையிலேயே கழித்து விட்டு அருகிலேயே இருந்து உணவருந்தும் பாக்கியத்தையும் சேர்த்தே கொடுத்து விட்டான் அந்த இறைவன். ‘அம்மா’ என வாஞ்சையோடு ஓடி வரும் மகனை அள்ளி அணைக்க முடியாத கொடுமை இந்த தாயைப் போல் வேற எந்த தாய்க்குமே நேர்ந்து விடக் கூடாது.
குடும்பத் தலைவனாய் இருந்தும் கூட கட்டிய மனைவியின் கண்ணீரையும் பெற்ற பிள்ளைகளின் ஆசையையும் நிறைவேற்ற முடியாமல் உள்ளுக்குள்ளேயே தன்னைத் தானே நொந்து கொள்ளும் நிலை கூட எந்த தகப்பனுக்குமே உருவாகிவிடக் கூடாது. இந் நிலை நேருமென்று முன்பே தெரிந்திருந்தால் போரின் போதே உயிரை விட்டிருக்கலாம் எனக் கூட இந்த தகப்பன் எண்ணியிருக்கக் கூடும். உயிர் போயிருந்தால் உடன் மரணம் இன்று நித்தமும் மரணம்.
கல்வி கற்ற கூட வசதியற்று எதிர்காலமே கேள்விக் குறியாய் மாறிப் போன இப் பிள்ளைகள் செய்த பாவம் தான் என்ன?
உணர்வுகளை மூட்டை கட்டி மூலையில் வைத்து விட்டு எதிர்காலக் கனவுகளை சுமந்து வாழும் இவர்கள் துயர் துடைக்க உதவிடுவோம்

No comments:

Powered by Blogger.