Header Ads

ஆர்யா, விஷ்ணுவர்த்தன் இணையும் யட்சன் படப்பிடிப்பு தொடங்கியது

அறிந்தும் அறியாமலும் படத்தில் ஆர்யாவை அறிமுகப்படுத்தியவர் விஷ்ணுவர்த்தன். அந்த நன்றி உணர்வால் விஷ்ணுவர்த்தன் எப்போது நடிக்க கூப்பிட்டாலும் கிளம்பி விடுவார் ஆர்யா. பட்டியல், சர்வம், ஆரம்பம் என இவர்கள் இணைப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. அடுத்து விஷ்ணுவர்த்தன் இயக்கும் யட்சன் படத்தில் ஆர்யாதான் ஹீரோ. அவருடன் விஷ்ணுவர்த்தனின் தம்பி கிருஷ்ணா நடிக்கிறார். கிருஷ்ணா நடித்துள்ள யாமிருக்க பயமேன். வானவராயன் வல்லவராயன் படங்கள் வெளிவர வேண்டியது இருக்கிறது.

இந்தப் படத்தின் மூலம் விஷ்ணுவர்த்தன் தயாரிப்பாளராகவும் ஆகியிருக்கிறார், விஷ்ணுவர்த்தன் பிலிம் பேக்டரி என்று தனது நிறுவனத்துக்கு பெயரும் வைத்திருக்கிறார். யட்சனை பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் யுடிவிக்கு தயாரித்துக் கொடுக்கிறார். எழுத்தாளர்ககள் சுபா எழுதிய கதைக்கு விஷ்ணுவர்த்தன் திரைக்கதை வடிவம் கொடுத்து இயக்குகிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். கிஷோர், தம்பி ராமையா, ஜான் விஜய் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

"காதல் மோதல் நிறைந்த ஒரு ஜாலியான படம், ஆர்யாவுக்கும், கிருஷ்ணாவுக்கும் அவரவர்களுக்கு தேவையான அளவிற்கு முக்கியத்தும் இருக்கும். எனது முதல் தயாரிப்பே யுடிவியுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. யட்சன் என்றால் இயக்குபவன் என்று பொருள். யார் யாரை இயக்குகிறார்கள் என்பதுதான் கதை" என்கிறார் விஷ்ணுவர்த்தன். அவரின் அலுவலகத்தில் பூஜையுடன் படப்பிடிப்புகள் தொடங்கியது.

No comments:

Powered by Blogger.