Header Ads

ரஜினி முருகனாக மாறும் சிவகார்த்திகேயன்!

மான் கராத்தே படத்தை அடுத்து டாணா என்ற படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். நடிகர் தனுஷ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தை எதிர்நீச்சல் படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் டாணாவை இயக்குகிறார். டாணா படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பது பொன்ராம் இயக்கும் படத்தில். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை இயக்கியவர் இவர். இந்தப் படத்தை இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதிசாமி பிரதர்ஸ் படநிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் ரஜினி ரசிகராக நடிக்க உள்ளாராம் சிவகார்த்திகேயன். எனவே படத்துக்கு ரஜினி முருகன் என்று பெயர் வைத்துள்ளனர். இந்த விஷயம் அரசல்புரசலாக வெளியே தெரியவந்தநிலையில், ரஜினி முருகன் என்ற தலைப்பை மாற்றிவிடலாமா என்று தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் தரப்பில் யோசித்திருக்கின்றனர். சிவகார்த்திகயேனோ விடாப்பிடியாய் ரஜினி முருகன் என்ற தலைப்பை மாற்றக் கூடாது என்று சொல்லிவிட்டாராம்.

பூஜை போட பல மாதங்கள் இருக்கின்றன. அதற்குள் என்னென்ன மாற்றங்கள் நடக்குமோ?

No comments:

Powered by Blogger.