Header Ads

திருமணம் குறித்த எண்ணம் இல்லை: நடிகை ரம்யா பேட்டி

காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாண்டியா பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார் இளம் வயதில் எம்.பி. ஆன நடிகை ரம்யா.  அவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தற்பொழுது திருமணம் செய்து கொள்வதற்கு நான் தயாராக இல்லை.  வருங்காலத்திலும் திருமணம் செய்து கொள்வதாக இல்லை.

திருமணம் என்பது எனக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று இல்லை என்று கூறிய ரம்யா, தனது முன்னாள் காதலரான ரபேல் குறித்து கேட்டதற்கு அவர் தற்பொழுதும் ஒரு நல்ல நண்பர் என்று தெரிவித்துள்ளார்.  தீவிர அரசியலில் இறங்கியுள்ளதாக கூறியுள்ள அவர், தனது தொகுதிக்கு தன்னால் இயன்ற அனைத்து நன்மைகளையும் செய்ய உள்ளதாகவும், எனவே, திருமணம் செய்து கொண்டு உடனடியாக குடும்பத்தை கவனிப்பது என்பதில் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அவர் முன்னாள் காதலரான ரபேலுடன் ஒன்றாக சுற்றி திரிந்ததை குறித்து கேட்டபொழுது, அவர் எப்பொழுதும்போல் இன்றும் ஒரு நல்ல நண்பர்.  ஆனால் திருமணம் அல்லது அதுபோன்ற வேறு பந்தத்தில் இணைவது குறித்து தனது எண்ணத்தில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.  பேட்டியின்போது அவர் அரசியல் குறித்து கூறுகையில், நரேந்திர மோடியிடம் நான் கண்ட ஒரு நல்ல குணம் என்னவென்றால் அவர் தப்பிக்கும் வழியை தெரிந்து வைத்திருப்பவர் என்பதுதான் என்றும் நடிகை ரம்யா கூறியுள்ளார்.

No comments:

Powered by Blogger.