Header Ads

ஏ.ஆர்.ரஹ்மான் பிரபுதேவாவுடன் இணையும் வடிவேலு?

பலதடைகளுக்குப் பிறகு வடிவேலு நடித்து வெளிவர இருக்கும் படம் 'தெனாலிராமன்'. இப்படத்தை முடித்த பிறகு பல வாய்ப்புகள் தேடி வருகிறதாம்.

அடுத்ததாக நாலைந்து படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார் வடிவேலு. அதில் ஒன்று பிரபுதேவா இயக்கும் படமாம்.

பிரபுதேவா, வடிவேலு திரையில் வரும் காட்சிகள் அனைத்துமே இப்பொழுதும் அனைவராலும் பேசப்படுகின்றவை. இப்போது பிரபுதேவா மோஸ்ட் வான்டட் இயக்குநராக இருக்கிறார்.



இந்நிலையில் பிரபுதேவா வடிவேலு இயக்கத்தில் நடித்தால் நிச்சயம் ரசிகர்களைக் கவரும். வழக்கமாக மன்னர் உடையிலேயே ஹீரோவாக வலம் வரும் வடிவேலு இந்தப் படத்தில் பேண்ட் சட்டை அணிந்து நடிக்கிறார்.

ஏற்கனவே பிரபுதேவா இயக்கிய 'போக்கிரி' படத்தில் வடிவேலு நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துத் தருவதாக உறுதியளித்திருக்கிறாராம்.

வடிவேலுவுக்கு அடிச்சாம் பாரு அப்பாயின்மெண்ட் ஆர்டர! கலக்குங்கையா கலக்குங்கையா!

No comments:

Powered by Blogger.