காயத்ரியுடன் தொடர்ந்து நடிப்பது ஏன்? விஜய் சேதுபதி பதில்
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் ஜோடி சேர்ந்த விஜய் சேதுபதி-காயத்ரி அடுத்து ரம்மி‘யில் இணைந்தனர். தற்போது மெல்லிசை படத்தில் நடிக்கின்றனர். இப்படம் பற்றி இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி கூறும்போது,படத்தில் வரும் கதாபாத்திரங்கள் இசை சம்பந்தபட்டவை. அதனால்தான் மெல்லிசை என பெயரிடப்பட்டிருக்கிறது. சி.எஸ்.சாம் இசை அமைக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு. விஜய் சேதுபதி எதேச்சையாக இக்கதையை கேட்டார். உடனே நடிக்க ஒப்புக்கொண்டார்.
தீபன் பூபதி, ரெதேஷ் வேலு தயாரிக்கின்றனர் என்றார்.ஏற்கனவே 2 படங்களில் காயத்ரியுடன் ஜோடி போட்ட நீங்கள் மீண்டும் அவருடன் நடிப்பது ஏன்? என்று விஜய் சேதுபதியிடம் கேட்டபோது, எனது படங்களில் ஆக்ஷன் இருக்கிறதா? டூயட் இருக்கிறதா? என்று பார்ப்பதில்லை. வித்தியாசமான கதையா என்றுதான் பார்க்கிறேன். ஹீரோயினாக யாரை நடிக்க வைக்க வேண்டும் என்று நான் சொல்வது கிடையாது.
எனக்கு வந்த சில வாய்ப்புகளை கால்ஷீட் இல்லாத காரணத்தால் வேறு ஹீரோக்களின் பெயர்களை சொல்லி அவரை நடிக்க வைக்கும்படி கேட்டிருக்கிறேன். ஆனால் எனக்கு ஜோடியாக இவரைத்தான் ஹீரோயினாக போட வேண்டும் என்று நான் சொல்வதில்லை. ஏற்கனவே காயத்ரியுடன் நடித்த படங்கள் வரவேற்பு பெற்றதால் கமர்ஷியல் நோக்குடன் மீண்டும் இயக்குனர்கள் அதே ஜோடியை வைத்து இயக்குவது கோலிவுட்டில் புதிதல்ல என்றார். -

No comments: