பிரபலங்களை பண்ணை வீட்டுக்கு அழைக்கும் நடிகை!
சினிமாவில் வாய்ப்பில்லாமல் ஒதுங்கி கிடக்கும் பிசின் நடிகை அவரது சொந்த ஊரான மலையாள கரையோரத்தில் ஒரு பண்ணை வீடு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளாராம். இயற்கை சூழலுடன் அமைந்துள்ள இந்த பண்ணை வீட்டுக்கு அருகிலேயே நதியும் ஓடுகிறதாம். அதனால், ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் அந்த பண்ணை வீட்டுக்கு சென்று தங்குவதுடன், அதை பராமரிப்பதிலும் முழு கவனம் செலுத்துகிறாராம்.
அதுமட்டுமில்லாமல், தனது குடும்ப நண்பர்கள், தோழிகள் தவிர பாலிவுட் ஸ்டார்களையும் பண்ணை வீட்டுக்கு வந்து தங்கிச் செல்லுமாறு அழைப்பும் விடுக்கிறாராம். இவரது அழைப்பை இவரை வைத்து இந்தியில் படமெடுத்த பிரபல பாலிவுட் இயக்குனர் ஒருவர் சமீபத்தில் இவரது பண்ணை வீட்டிற்கு வந்து தங்கி விட்டு சென்றாராம். அவருக்கு தேவைப்பட்ட அனைத்து வசதிகளையும் நடிகை தனது சொந்த செலவிலேயே பணிவிடை செய்து அனுப்பி வைத்தாராம்.

No comments: