Header Ads

ஹன்சிகாவுக்கு இனிமேல் அவரது அம்மாதான் மானேஜர்!

சிம்புவின் காதல் முறிவுக்குப் பிறகு முழுமையாய் தன் அம்மாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டார் ஹன்சிகா. பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்த ஹன்சிகா, பெரிய மனுஷியான பிறகு கதாநாயகியாய் உயர்ந்தார். கதாநாயகியான பிறகு தெலுங்கு, தமிழ் மொழிகளில் நடிப்பதற்கே முக்கியத்துவம் கொடுத்தார். மும்பையைச் சேர்ந்த ஹன்சிகாவுக்கு தெலுங்கு மற்றும் தமிழ்த்திரையுலகம் பரிச்சயமில்லாத காரணத்தினால், மானேஜரை நியமித்துக் கொண்டார். இதுநாள்வரை மானேஜர் சொல் கேட்டுத்தான் நடந்து வந்தார் ஹன்சிகா.

இந்நிலையில் மானேஜரை நீக்கிவிட்டு, தானே ஹன்சிகாவின் கால்ஷீட் விவகாரங்களை ஆரம்பித்துவிட்டார் ஹன்சிகாவின் தாய்க்குலம். டாக்டரான இவர் க்ளினிக்குக்கு பூட்டுபோட்டுவிட்டு முழுநேரமாக மகளுக்கு உதவியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கப்போகிறாராம். ஹன்சிகாவின் கால்ஷீட் தேவைப்படுகிறவர்கள் இனி தன்னையே அணுக வேண்டும் என்று மீடியாக்களுக்கு அறிக்கை அனுப்பி உள்ளார்.

No comments:

Powered by Blogger.