நிர்வாணமாக நடிப்பதில் உடன்பாடு இல்லை நீச்சல் உடை மற்றும் முத்தகாட்சிகளுக்கு ஒகே -அலியா பட்
ஸ்டூடண்ட் ஆப் தி இயர் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான 21 வயது இளம் நாயகி அலியா பட் தொடர்ந்து அலியா பட் நடித்த ஹைவே படத்தில் நடித்தார். ஏ.ஆர்.ரஹ்மான இந்த படத்துக்கு இசையமைத்ததுடன் அலியா பட் உடன் சில காட்சிகளில் நடிக்கவும் செய்தார். ஏ.ஆர்.ரஹ்மானுடன் நடித்த ஒரே நடிகை என்ற புகழ் இவருக்கு உண்டு.
அலியா பட் பிரபல திரைபட தயாரிப்பாளரின் மகள் ஆவார். ம்சமீபத்தில் ஒரு ஆங்கில இதழுக்கு பேட்டியளித்த அலியாபட் "நிர்வாணமாக நடிப்பதில் எனக்கு சிறிதுகூட உடன்பாடு இல்லை. ஆனால் அதே நேரத்தில் கதைக்கு தேவைப்படும் பட்சத்தில் பிகினி உடை அணிந்து நடிக்கவோ அல்லது உதட்டுஉடன் உதடு முத்தக்காட்சியில் நடிப்பதற்கோ எனக்கு எவ்வித தயக்கமும் இல்லை என்று கூறி உள்ளார்.
தற்போது இவர் நடித்துக்கொண்டிருக்கும் 2 ஸ்டேட் என்ற படத்தில் நாயகன் அர்ஜூன் கபூருடன் சேர்ந்து லிப் லாக் முத்தக்காட்சியில் நடித்ததாக கூறப்படுகிறது. மூன்று வினாடிகளே திரையில் தோன்றும் அந்த முத்தக்காட்சி படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்று கூறப்படுகிறது 2 ஸ்டேட் என்ற திரைபடம் வரும் ஏப்ரல் 18-தேதி திரையிடபடுக்கிறது என்பது குறிப்பிடதக்கது

No comments: