Header Ads

கணவனின் குடும்பத்தை தீர்த்து கட்ட மொபைல் வாட்சப்பில் கள்ளகாதலனுக்கு திட்டம் போட்டு கொடுத்த மனைவி

கேரள மாநிலம் ஆற்றிங்கல்  அருகே உள்ள மன்னாபாகம் பகுதியை சேர்ந்தவர் விஜிஸ் (வயது40). இவரது மனைவி அனுசாந்தி (35). இந்த தம்பதியின் குழந்தை சுவஸ்திகா (4). இவர்கள் 3 பேரும் விஜீசின் தாயார் ஓமணாவுடன் (67) ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

அனுசாந்தி  டெக்னோ பார்க்கில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அந்த கம்பெனியில் வேலை பாக்கும் நினோ மேத்யூ(வயது 40) என்பவருக்கும் அனு சாந்திக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

அடிக்கடி அனுசாந்தியை தனது காரில் நினோ மேத்யூ, அவரது வீட்டில் கொண்டு விட்டுள்ளார். இதனால் அனு சாந்தியை கணவர் விஜிஸ் மற்றும் மாமியார் ஓமணா ஆகியோர் கண்டித்தனர். ஆனாலும் அனுசாந்தி தனது கள்ளத் தொடர்பை துண்டிக்க வில்லை.

இதனால் விஜிஸ், வினோ மேத்யூவை கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வினோ மேத்யூ சம்பவத்தன்று கையில் கத்தியுடன் விஜிஸ் வீட்டுக்கு சென்று அவரை குத்தினார்.

ரத்த வெள்ளத்தில் விஜிஸ் கீழே சாய்ந்தார். அவரது அலறல்  சத்தம் கேட்டு வீட்டில் இருந்த ஓமணா பேத்தி கார்த்திகாவை கையில் தூக்கிக் கொண்டு வெளியில் ஓடி வந்தார். உடனே ஓமணாவையும் குழந்தை சுவஸ்திகாவையும்  சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு வினோ மேத்யூ தப்பி ஓடி விட்டார்.

இதில் ஓமணாவும், சுவஸ்திகாவும் பரிதாபமாக இறந்து போனார்கள். விஜிஸ் ஆற்றிங்கல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி ஆற்றிங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து நினோ மேத்யூவை கைது செய்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன் அதன் விவரம் வருமாறு:-

No comments:

Powered by Blogger.