ஜெயலலிதா பிரதமரானால் கச்சத்தீவு மீட்கப்படும்: சீமான்
விழுப்புரம் நாடாளுமன்ற அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து திருச்சிற்றம் பலம் கூட்டு ரோட்டில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசியதாவது:–
கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து ஏமார்ந்து போனோம். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு போடவேண்டியது வாக்கு இல்லை. வாக்கரிசி தான். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி, பா.ஜ.க. ஆட்சி என மாறி மாறி ஆட்சி நடத்தி இருந்தாலும் கடந்த 16 ஆண்டுகளாக மத்திய அமைச்சரவையில் பங்கு பெற்ற தி.மு.க வினால் தமிழ்நாட்டுக்கு என்ன பலன் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்?
தேர்தல் அறிக்கையில் கட்ச தீவை மீட்க தீவிரமாக போராடுவோம் என்கிறார் கலைஞர். அப்படியானால் கட்ச தீவை மீட்க இதுவரை தீவிரமாக போராடியது இல்லையா, முதல்வர் பதவியில் இருந்த கலைஞர் இதற்கு போராடியது இல்லை என்றால் ஏன் முதல்வர் பதவி வேண்டும், தேர்தலில் ஏன் வாக்கு கேட்டு வருகிறீர்கள்?
இனப்படுகொலையின் போது உண்ணாவிரதம் என்று போராட்ட நாடகத்தை நடத்தி அங்கு பல லட்சம் மக்களை கொன்று குவித்த மத்திய அரசுக்கு கைகோர்த்து இருந்தாரே கலைஞர் அவருக்கு தமிழக மக்கள் ஒட்டு போடுவார்களா? நிச்சயம் அவருக்கு ஓட்டுபோடமாட்டார்கள்.
இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை, ராஜபக்சே போர் குற்றவாளி என்று தமிழக சட்டசபையில் தீர்மாணம் கொண்டுவந்தவர் ஜெயலலிதா. அதை மத்திய அரசு ஏற்கவில்லை, இந்தியாவில் புத்தர் சிலையினை திறந்து வைக்க பாஜக வின் மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் வரவழைக்கப்பட்டவர் ராஜபச்சே, அந்த பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளாரே வைகோ, இது துரோகமில்லையா? இலங்கையின் நம் இனத்தில் வழிபாட்டு தலங்களை இடித்துவிட்டு இந்தியாவிற்கு வந்து ஆந்திராவில் சாமி தரிசனம் செய்கிறாரே ராஜபச்சே, அவரை ஆதரித்து காங்கிரஸ் கட்சி தமிழகத்திலிருந்து விரட்டபடவேண்டும்.
விஜயகாந்த் தமிழனத்திற்காக போராட்டகள் நடத்தியது உண்டா, போராட்டம் நடத்தினால் காங்கிரஸ் கட்சியுடனும் பாஜக வுடன் கூட்டனி வைக்க முடியாது அரசியல் லாபம் கிடைக்காது. முரசு அதிர தாமரை மலரும் என்கிறாரே விஜயகாந்த் தஞ்சையில் வந்து முரசு அதிரட்டும் பயிர்கள் வளருமா என்று பார்ப்போம்.
தமிழகத்தை வஞ்சிக்கும் கட்சிகளோடு இவர்கள் கூட்டணி அமைந்துள்ளனர். குஜராத் மாநிலம் பல மடங்கு தமிழகத்தை விட பின் தங்கிய மாநிலம். மின் இணைப்பு இல்லாத கிராமங்கள் பல உள்ளன. பெண்கள் புனிதமாக கருதப்படும் கர்ப்ப பையினை வாடகைவிடும் மாநிலத்தில் முக்கிய இடமாக உள்ளது.
எல்லாவற்றிலும் தமிழகத்தைவிட பின் தங்கிய குஜராத் முதல்வர் மோடி பிரதமர் பதவிக்கு போட்டியிடும் போது எல்லா துறையிலும் முதன்மை பெற்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் பதவிக்கு போககூடாதா? இலங்கையில் தமிழனம் காக்கப்படவேண்டும், கச்சதீவை மீட்கபடவேண்டும், இலங்கை அரசால் தமிழக மீணவர் தாக்கப்படுவதை தடுக்கபடவேண்டும் என்றால் தமிழக முதல்வர் பிரதமர் பதவிக்கு வரவேண்டும்.
பேரறிஞர் அண்ணாவின் வாக்குபடி ஒற்றை கட்சி ஆட்சி முறை மாற்றம் வேண்டும் கூட்டாட்சி முறை வேண்டும். மீத்தேன் எரிவாயு திட்டம், கெயில் எரிவாயு திட்டம் மூலம் பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழன மக்கள் மீது அக்கரை இல்லாத தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை தமிழகத்தைவிட்டு விரட்டவேண்டும்.
இவ்வாறு சீமான் பேசினார்.
.gif)
No comments: