கத்தி படத்தில் இரு வேடங்களில் விஜய்
ஜில்லா படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் புதிய படம் கத்தி. நாயகியாக சமந்தா நடிக்கிறார். ஏ.ஆர் முருகதாஸ் இயக்குகிறார்.
இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
வித்தியாசமான கதைக்களத்தில் ஆக்ஷன் படமாக இது தயாராகிறது. விஜய் இப்படத்தில் இரு வேடங்களில் வருகிறார்.
ஏற்கனவே விஜய், ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் வந்த துப்பாக்கி படம் வெற்றிகரமாக ஒடியதால் இந்த படத்துக்கும் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த படத்தை ஐங்கரன் கருணாமூர்த்தியும் வைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ் கரனும் இணைந்து தயாரிக்கின்றனர்.
வைகா, சுபாஷ் கரன் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் நண்பர் என்று திடீர் செய்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை ஐங்கரன் கருணா மூர்த்தி மறுத்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் சுபாஷ் கரன் முல்லை தீவை சேர்ந்த தமிழர். இலங்கையில் இருந்து நானும் சுபாஷ் கரனும் முப்பது வருடங்களுக்கு முன்பு வெளியேறினோம். சுபாஷ் கரன் வெளிநாடுகளில் பெரிய தொழில் அதிபராக இருக்கிறார்.
அவர் நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான பேர் வேலை பார்க்கின்றனர். அறக்கட்டளை மூலம் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுபாஷ் கரன் உதவிகளை செய்து வருகிறார். கடந்த வருடம் வாடைக்கு ஹெலிகாப்டர் எடுத்து முல்லைத்தீவு பகுதியை நாங்கள் சுற்றி பார்த்தோம்.
இலங்கை அரசுக்கும் சுபாஷ் கரனுக்கும் எந்த தொடர்பும் இல்லை ராஜபக்சே நண்பர் என வெளியான செய்திகள் உண்மையானவை அல்ல என்று கூறியுள்ளார்.

No comments: