நான் சிகப்பு மனிதன்..விமர்சனம்.video
பாண்டியநாடு படத்திற்கு பிறகு சினிமா கிராப் ஒரே சீராக சென்று கொண்டிருக்கும் வகையில் படங்களை தேர்வு செய்து நடித்து கொண்டு இருக்கிறார் விஷால்.
அந்த வகையில் இன்று ரிலீஸ் ஆகி உள்ள நான் சிகப்பு மனிதன் தன்னுடைய சினிமா வாழ்கையில் மிக பெரிய படமாக இருக்கும் என்று தெரிவித்து இருந்தார்.
தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர் படங்களை தொடர்ந்து ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தின் மூலம் மூன்றவாது முறையாக இயக்குனர் திருவுடன் கூட்டணி சேர்ந்துள்ளார் விஷால்.’நார்கொலாப்ஸி’ என்ற வியாதியினால் அவதிப்படும் ஒரு இளைஞனை பற்றிய கதை தான் என்றாலும் ‘லிப் லாக்’ என்ற ஒரு காட்சியை வைத்து நல்ல விளம்பரம் செய்து விட்டார்கள்.
கதை என்ன ?
சிறு வயதிலிருந்தே ‘நார்கொலாப்ஸி’(அதாவது கோபம், சந்தோசம், துக்கம் எதுவாக இருந்தாலும் சட்டென்று தூங்கி விடுவார்) என்ற நோயில் அவதிப்படும் மனிதர் விஷால்.
இப்படிப்பட்ட மனிதரை நம்ம லக்ஷ்மி மேனன் லவ் பண்றாங்க, ஆனால் ஒரு தவிர்க்க முடியாத சூழ்நிலையில், வில்லன்களிடம் மாட்டிக்கொண்ட லட்சுமி மேனனை இந்த வியாதியினால் காப்பாத்த முடியாமல் தவிக்கிறார் விஷால்.
இந்த பிரச்சனையால் லட்சுமி மேனன் கோமா ஸ்டேஜ்க்கு போய் விடுகிறார். இதனைத் தொடர்ந்து வெகுண்டெழும் விஷால் இதற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து எவ்வாறு துவசம் செய்கிறார் என்ற மீதிக்கதையுடன் படம் நகர்கிறது.
ரசிக்கும் இடங்கள்
எல்லா மனிதர்களுக்கும் ஒரு கனவு உண்டு அது போல் விஷாலுக்கும் சில அசைகள் உண்டு, ரோட்ல தனியாப் போகணும்..ஒருநாள் ஃபுல்லா முழிச்சிருக்கணும்..தேவதையைப் பார்க்கணும்..லவ் பண்ணனும்..கிஸ் பண்ணனும்..தப்பு செய்றவங்களை தட்டிக்கேட்கணும்ன்னு பத்து விஷயங்களை லிஸ்ட் போட்டு வச்சிருக்காரு.
ஆசைகளை வெவேறு படுத்தி கட்டாமல் கதையோடு நகரும் அந்த ஆசைகளை ஒரு கவித்துவம் போல கட்டி இருப்பது அழகு.
சமர் படத்தை போலவே முதல் பாதியில் அசத்தியுள்ளார் திரு. லட்சுமி மேனன் காப்பாத்த முடியாமல் தவிக்கும் நேரத்தில் வருகிறது நச்சுன்னு இண்டர்வல் பிளாக்.
இரண்டாம் பாதியில் லட்சுமிமேனன் கோமா நிலைக்கு செல்லும் படி ஆக்கிய வில்லன்களை எப்படி பழி வாங்குகிறார் என்ற ஆவலை நமக்குள்ள தூண்டி இருப்பது ஒரு பெரிய பலம்.
ரவுடிகளில் ஒருத்தன் பேர் மட்டும் விஷாலுக்கு தெரியுது. அதை வச்சு, அவங்களைத் தேடி அவர் அலையறாரு. அந்த ரவுடியைக் கண்டுபிடிக்கும்போது, அவங்களை அனுப்புன வில்லன் யாருன்னு நமக்குத் தெரியுது. அந்த வில்லன் ஏன் அப்படி விஷாலுக்குப் பண்ணான்னு ஒரு ஃப்ளாஷ்பேக் வைக்கிறாங்க பாருங்க, அங்கே தான் படம் டொக் ஆகிடுது.
படத்தின் மிகப்பெரிய பலவீனம் அந்த ஃப்ளாஷ்பேக் தான். குடும்பத்தோடு பார்க்கிற மாதிரி ஃப்ளாஷ்பேக் இல்லை என்பது சினிமாவின் மீதான வெறுப்பை தான் உண்டாக்கும்.
கண்டிப்பாக லிப் லாக் சீனுக்காக மட்டும் இந்த யு/ஏ சான்றிதழ் கொடுத்திருக்க மாட்டாங்கன்னு புரிஞ்சது.
இனியா எனும் நல்ல நடிகையை அந்த ஃப்ளாஷ்பேக்கில் பொருத்தியிருப்பது தேவை இல்லாத கேரக்டர் மாதிரி தெரிஞ்சது, ஆனால் நடிப்பில் நல்ல முன்னேற்றம். அந்த ஃப்ளாஷ்பேக்கை நீங்களே திரையரங்கில் போய் பாருங்கள்.
பிறகு அந்த கேவலமான ஃப்ளாஷ்பேக் முடிந்ததும், எப்படி வில்லனை பழி வாங்குகிறார் என்பது மீதிக்கதை .
சமர் படம் போலவே முதல் பாதியை விறுவிறுப்பாக கொண்டு சென்றுவிட்டு இரண்டாம் பாதியில் கோட்டை விட்டுவிட்டார் ...
நடிகர், நடிகைகள்
விஷால்
பாண்டிய நாடு படத்திற்கு பிறகு விஷால் ஒரு நடிகனாக நல்ல முன்னேற்றம். இந்த மாதிரி வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிங்க பாஸ் .
’நார்கொலாப்ஸி’ என்ற வியாதியால் அவதிப்படும் போது அனுதாபம் என்ற சொல்வதை விட வலியை காட்டி இருக்கிறார்.
லட்சுமி மேனன்
ஸ்கூல் பொன்னான லட்சுமி அந்த லிப் லாக்கில் கூலாக நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்துள்ளார்.
இதுவரை பார்த்த லட்சுமி மேனனை விட இந்த படத்தில் கொஞ்சம் கவர்ச்சியாக உள்ளார். நடிப்பிலும் நல்ல முன்னேற்றம்.
பாடல் கட்சிகளில் கலர்புல்லாக அவரை காட்டி இருப்பது அழகு பதுமை. ‘கதைக்குத் தேவைப்பட்டதால முத்தம் கொடுத்தேன்’ன்னு தடாலடியாக சொன்னது, படம் பார்த்து பிறகு அது உண்மை தான் என்று புரிந்தது.
பலம்
ரிச்சர்ட்டின் ஒளிப்பதிவு படத்துக்கு மிக பெரிய பலம். ஆக்ஷன் காட்சிகளையும் சரி, ரொமாண்டிக் காட்சிகளையும் சரி அதுக்கான கலர்டோனை கச்சிதமாக காட்டியுள்ளார்.
இவருக்கு ஈடு கொடுக்கும் வகையில் ரூபனின் எடிட்டிங் பிண்ணி பெடல் எடுத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். படத்தின் முதல் பாதி படம் போனதே தெரியவில்லை.
ஜி.வி.பிரகாஷ் பாடல்கள் ஓகே ரகம் மற்றும் பின்னணி இசையில் சில இடங்களில் வெளுத்து வாங்கியுள்ளார். படத்தின் இன்னொரு பெரிய பலம் வில்லன், இவர் தான் வில்லனா என்று நம்மை யோசிக்க வைத்துள்ளார்.
பலவீனம்
படத்தின் இரண்டாம் பாதி, கதையோடு நகராமல் எங்கு செல்கிறது என்று தெரியவில்லை. நம்மை வெறுப்பேற்றும் அந்த ஃப்ளாஷ்பேக்
ரஜினியின் நான் சிகப்பு மனிதன் என்ற கம்பீரமான டைட்டிலை வைத்து படத்தின் எதிர்பார்ப்பை கூட்டி ரஜினி ரசிகர்களை உசுப்பேத்தி உள்ளார் இயக்குனர் திரு.
அந்த எதிர்பார்ப்பை ஈடு கட்டி உள்ளதா என்று பார்த்தல் அரை கிணறு மட்டுமே தாண்டி உள்ளனர்.
ஆக மொத்தத்தில் ‘நான் சிகப்பு மனிதன்’ - மக்களுக்கு அரை தூக்கத்தை கொடுக்கும்!
நடிப்பு :- 3/5
தொழில்நுட்பம் :- 3/5
மொத்தத்தில் :- 3/5

No comments: