Header Ads

ஒரு கோடி செலவில் 'கத்தி' க்ளைமாக்ஸ்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிக்கும் 'கத்தி' படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடந்து முடிந்துவிட்டது. 

அடுத்து சென்னயில் ஷூட்டிங் தொடங்க இருக்கிறதாம்.

அனிருத் இசையமைக்க, ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். 

'கத்தி' படத்தை தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது படக்குழு.

படத்தின் டீஸர் சுதந்திரதினத்தன்று வெளியாகிறதாம். அதே நாளில் 'அஞ்சான்' படம் ரீலிஸ் ஆவது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் தரப்பில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14ல் வெளியாவதாக சொல்லப்படுகிறது.

'கத்தி' படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி இதுவரை இல்லாத அளவுக்கு புதுமையாக,  ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட இருக்கிறது.

இதற்காக ஒரு கோடி செலவில் பிரம்மாண்டமாக செட் போடப் போகிறார்களாம்.


No comments:

Powered by Blogger.