Header Ads

அமெரிக்காவில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இந்திய பாதிரியார் நாடு கடத்தப்படுகிறார்

அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் பாதிரியாராக பணியாற்றி வந்த இந்தியர் லியோ சார்லஸ் கொப்பளா அப்பகுதியை சேர்ந்த ஒருவரது வீட்டுக்கு விருந்துக்கு சென்றுள்ளார். விருந்துக்கு சென்ற பாதிரியார் அங்கிருந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.சிறுமிக்கு முத்தம் தந்த பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். விருந்து முடிந்தும் சிறுமி தன்னிடத்தில் பாதிரியார் நடந்துகொண்ட விதம் குறித்து தந்து பாட்டியிடம் கூறினார். பின்னர் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தபோது பாதிரியார் லியோ தன்மீதான குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்டார்.

இவருக்கு 36 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க அமெரிக்க சட்டத்தில் இடம் உள்ளது. ஆனால் நீதிமன்றம் அவரை குற்றவாளி என அறிவித்து, 25 ஆண்டு காலம் நன்னடத்தை மேற்பார்வையில் வைத்து உத்தரவிட்டது. தண்டனையை தொடர்ந்து பாதிரியார் லியோ, உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்.

No comments:

Powered by Blogger.