கள்ளக்காதலுக்கு இடையூறு காதலனுடன் சேர்ந்து மாமியாரை கொன்ற மருமகள்
காட்டுமன்னார்கோவில் அருகே சிறகிழந்த நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் நெடுமாறன். இவரது மனைவி மீனாட்சி. இவர்களுக்கு லட்சுமணன், இளவரசன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். லட்சுமணனின் மனைவி அம்சவள்ளி (25) மகன்கள் புவனேஷ் (6), யோகேஷ் (2) லட்சுமணனின் தந்தை நெடுமாறன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். லட்சுமணன் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார்.லட்சுமனனின் சகோதரர் இளவரசன் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வந்தார்.
அம்ச்சவள்ளி தனது குழந்தைகளுடன் சிறகிழந்த நல்லூரில் தனது மாமியார் மீனாட்சியுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை திடீரென மீனாட்சி இறந்து விட்டதாக திருப்பூரில் வேலை பார்க்கும் இளவசரனுக்கு அம்சவள்ளி தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து இளவரசன் பதறியடித்துக் கொண்டு சிறகிழந்த நல்லூருக்கு வந்தார். தனது தாயின் உடலை பார்த்த இளவரசன் அவரது கழுத்திலும், காலிலும் ரத்தக்காயங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதைத்தொடர்ந்து இளவரசன் இதுகுறித்து குமராட்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் அமசவள்ளியை கைது செய்து விசாரணை நடத்தினர்
விசாரணையில் அம்சவள்ளி கூறியதாவது:-
எனக்கும் இதே பகுதியை சேர்ந்த வேன் டிரைவர் காளிரத்னம் (26) என்பவருக்கும் கடந்த 6 மாதமாக கள்ளக்காதல் இருந்து வந்ததது. இந்த கள்ளக்காதலுக்கு மீனாட்சி இடையூறாக இருந்து வந்தார். எனவே அவரை கொலைசெய்ய நானும், காளிரத்னமும் திட்டமிட்டோம். அதன்படி நேற்று முன்தினம் இரவு மீனாட்சி சாப்பிட்டு கொண்டிருந்தபோது நானும், காளிரத்னமும் சேர்ந்து மீனாட்சியை கொன்றோம். நான் மீனாட்சியின் கால்களை பிடித்து கொள்ள காளிரத்னம் மீனாட்சியை கழுத்தை நெரித்து கொன்றார். இவ்வாறு அவர் கூறி உள்ளார்
இதையடுத்து போலீசார் அமசவள்ளி மீது கொலைவழக்குபதிவுசெய்து உள்ளனர்.

No comments: