அஜீத்துடன் டூயட் பாடிய நான் வில்லியாக நடிப்பதா? தேடிவந்த வாய்ப்பை தட்டிக்கழித்த த்ரிஷா!!
சினிமா உலகைப்பொறுத்தவரை ஹீரோயினி என்ற இமேஜியில் இருந்து சற்று சறுக்கினாலே அதன்பிறகு அவர்களை மீண்டும் ஹீரோயினியாக ஆக்குவது நடக்காத காரியம். அதனால்தான் ஹீரோயினி மாதிரியான ஒரு ரோல் என்று டைரக்டர்கள் இழுத்தாலே அந்த படங்களை ஏற்க மாட்டார்கள் நடிகைகள்.
அப்படித்தான் அஜீத்தைக்கொண்டு கெளதம்மேனன் இயக்கும் படத்திலும் ஹீரோயினி மாதிரி ஒரு ரோல். ஆனால் நெகடீவான ரோல் என்று இழுத்தார். இதனால் உஷாராகி விட்டார் த்ரிஷா. அஜீத்துடன் மங்காத்தா வரை டூயட் பாடிய தன்னை வில்லியாக்கி சொர்ணாக்கா போன்று மாற்ற திட்டமிட்டு விட்டார் என்று கணக்குப்போட்டவர், தெலுங்கில் ஒரு படம் உள்ளது. தமிழில் சிம்புவுடன் செல்வராகவன் இயக்கும் அலைவரிசையில் நடிக்கிறேன். அதனால், இப்போதைக்கு கால்சீட் தருவது கொஞ்சம் கஷ்டம் என்று சொல்லி தேடிவந்த வாய்ப்பை தட்டிக்கழித்து விட்டார் த்ரிஷா.
இதே காரணத்துக்காகத்தான் முன்பு இந்த வேடத்துக்காக பேசப்பட்டு வந்த ஐ பட நாயகி எமி ஜாக்சனும் கழண்டு கொண்டாராம். அதனால் இப்போது அந்த வேடத்தில் பரதேசி தன்ஷிகாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். ஆக, மாஞ்சா வேலு ஹீரோவும் , அப்படத்தில் ஹீரோயினியாக நடித்த தன்ஷிகாவும் இப்படத்தில் வில்லன்-வில்லியாக நடிக்கிறார்கள்.

No comments: