மாணவர்களுக்கு செக்ஸ் தொல்லை; ஆசிரியைக்கு ஜெயில்
சிங்கப்பூரில் ஆசிரியை ஒருவர் தான் பணியாற்றும் பள்ளியில் படிக்கும் சிறுவனிடம் காதல் கொண்டு மிருகத்தனமாக நடந்து கொண்டதால் தற்போது கம்பி எண்ணுகிறார்.
சிங்கப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் 42 வயது ஆசிரியை அதே பள்ளியில் படிக்கும் 13 வயது மாணவனிடம் காதல் வெறி கொண்டு, அவனது உதடு, தோள்பட்டை மற்றும் கழுத்து உள்ளிட்ட இடங்களில் கடித்து காயப்படுத்தியதாக அவர் மீது சிங்கப்பூர் கோர்ட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் அவருக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
4 குழந்தைகளுக்கு தாயான இவர் மீதான வழக்கில் சிங்கப்பூர் குழந்தைகள் நல மையம் கோர்ட்டில் தாக்கல் செய்த ஆவணத்தில் அவர் ஏற்கனவே 2 சிறுவர்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments: