Header Ads

சிலியை தொடர்ந்து ஜப்பானிலும் சுனாமி தாக்குதல்

டோக்கியோ: சிலியை தொடர்ந்து ஜப்பானின் வடக்கு பகுதியில் இன்று அதிகாலை சுனாமி அலைகள் தாக்கின. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். முன்னெச்சரிக்கையாக 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர். பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள சிலி நாட்டில் நேற்று அதிகாலை 8.2 ரிக்டர் அளவுக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. கடற்கரை பகுதிகளில் சுனாமி அலைகள் தாக்கின. இதில் 6 பேர் பலியாயினர். பலர் படுகாயம் அடைந்தனர். மக்கள் இன்று விடிய விடிய சாலைகளில் பீதியுடன் இரவை கழித்தனர். இந்நிலையில், ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ள குஜி, ஐவேட் போன்ற பகுதியில் இன்று அதிகாலை 6.52 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. 

அதை தொடர்ந்து லேசான சுனாமி அலைகள் தாக்கின. கடந்த 2011ம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம், அதை தொடர்ந்து சுனாமி தாக்குதலில் ஐவேட் பகுதியும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அப்போது பலியாயினர். அதேபகுதியில் 20 சென்டி மீட்டர் உயரத்துக்கு சுனாமி அலைகள் எழுந்ததாக ஜப்பான் புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்தது. எனினும் எந்த பாதிப்பும் இல்லை. எனினும், கடந்த 2011ம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைப் போல் சுனாமி பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று ஜப்பான் புவியியல் ஆய்வு மையம் கூறியது.
இவாட் பகுதி கடலில் மாறுபாடு ஏற்பட்டவுடன், முன்னெச்சரிக்கையாக 22,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். சிலி, ஜப்பானில் நிலநடுக்கம், சுனாமி ஏற்பட்டதால், இந்தோனேசியாவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆனால், நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவில் சுனாமி தாக்குதல் அபாயம் இல்லை என்று அந்த நாடுகள் தெரிவித்துள்ளன.

No comments:

Powered by Blogger.