மான்கராத்தே வசூல் குறைந்தது! அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயன் ஹன்சிகா நடிப்பில் உருவான மான் கராத்தே திரைப்படம் தமிழகம் முழுக்க சுமார் 600 தியேட்டர்களில் கடந்த வாரம் வெளியானது. சிவகார்த்திகேயன் தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்ததால் ரசிகர்கள் மத்தியில் மான் கராத்தே படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. எனவே, மான் கராத்தே படத்துக்கு முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே ஐந்து நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன. அது மட்டுமல்ல, படம் வெளியான முதல் மூன்று நாட்களில் 12 கோடி வசூலித்ததாகவும் விநியோகஸ்தர்கள் தரப்பில் சொல்லப்பட்டது.
இப்படியான சூழலில், மான் கராத்தே வெளியாகி, ஆறு நாட்கள் கழிந்தநிலையில் பல தியேட்டர்களில் இன்று மான் கராத்தே படத்தின் வசூல் கடுமையாய் சரிந்துள்ளதாம். ஒவ்வொரு தியேட்டரிலும் அதிகபட்சமாக 50 முதல் 100 பேர் மட்டுமே படம் பார்த்து வருகிறார்களாம். தமிழ்நாடு முழுக்க பல தியேட்டர்களில் மான் கராத்தே படத்தை தூக்கிவிட்டு, நாளை முதல் நான் சிகப்பு மனிதன் படத்தை திரையிட உள்ளனராம். இந்த தகவல் தயாரிப்பு தரப்பை மட்டுமல்ல, சிவகார்த்திகேயனுக்கு அதிர்ச்சியளித்துள்ளதாம்.

No comments: