எஸ்.ஜே.சூர்யாவுக்கு இம்சையாக மாறிய இசை படம்
வாலி படத்தின் மூலம் வெற்றிப்பட இயக்குநராக வலம் வந்தவர் எஸ்.ஜே.சூர்யா. தொடர்ந்து வெற்றிப்படங்களை இயக்கிய அவர் ஒரு கட்டத்தில் நியூ படத்தின் மூலம் ஹீரோவானார். அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வேறு சில படங்களில் ஹீரோவாக நடித்து வந்தார். அவற்றில் பல படங்கள் தோல்வியடைந்ததினால் எஸ்.ஜே.சூர்யாவின் கேரியரில் மிகப்பெரிய தேக்கம் நிலவியது. பெரும்போராட்டத்துக்குப் பிறகு அதிலிருந்து மீண்டு, இசை என்ற படத்தை இயக்கி கதாநாயகனாகவும் நடித்தார். படம் ரெடியாகி பல மாதங்களான பிறகும் இசை இன்னும் வெளியாகவில்லை.
காரணம்...இசை படத்தின் சர்ச்சைக்குரிய கதை. ஏ.ஆர்.ரகுமானின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல் இளையராஜா என்னவெல்லாம் செய்தார் என்பதை சொல்லும் வகையில் இப்படத்தின் கதையை அமைத்திருக்கிறாரார் எஸ்.ஜே.சூர்யா. இந்தப் படத்தை வாங்கினால் இளையராஜாவின் கோபத்துக்கு ஆளாக வேண்டி வருமோ என்ற அச்சத்திலேயே இசை படத்தை வாங்கி வெளியிட யோசிக்கிறார்களாம். பெரும் தொகையை கடனாக வாங்கி இசை படத்தை தயாரித்த எஸ்.ஜே.சூர்யா என்ன செய்வது என்று தெரியாமல் முழிபிதுங்கிப்போயிருக்கிறாராம்.

No comments: