Header Ads

முத்தக்காட்சியில் கதாநாயகனின் உதட்டை கடித்து காயப்படுத்திய நடிகை கங்க்லான ரனாவத்

தமிழில் ஜெயம் ரவியுடன் தாம்தூம் உள்பட பல இந்தி  படங்களில் நடித்து உள்ளவர் கங்கானா ரனாவத். பிரபல பாலிவுட் இயக்குனர் சாய் கபீர் இயக்கத்தில்  ரிவால்வர் ராணி திரைப்படத்தில் நடித்து உள்ளார். இத்திரைப்படம்  வரும் 25-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் கங்கனா ரனாவத், பியூஷ் மிஸ்ரா, வீர் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். கதநாயகிக்கு முக்கியத்தும உள்ளபடம் கங்கானா  ரனாவத்திற்கு இது திருப்பு முனையை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் நடைபெற்றது. இதில் கங்கனா ரனாவத்துக்கும், வீர் தாஸுக்கும் உதட்டுடன் உதடு  முத்தமிடும் காட்சி எடுக்கபட்டது. . கங்கனா ரனாவத் முத்தக்காட்சியில் நடிக்க தயாராக இருந்தார். ஆனால் வீர் தாஸ் மிகவும் தயக்கத்துடனே காணப்பட்டார். அவருக்கு கங்கனா தைரியம் கொடுத்து நடிக்கவைத்தாராம்.

 ஆனால் காட்சி சரியாக வரவில்லை என்று இயக்குனர் அதிருப்தி அடைந்தார். பொறுத்து பொறுத்து பார்த்த கங்கனா, அடுத்த காட்சியில் முத்தம் கொடுத்த போது வீர் தாஸின் உதட்டை கடித்து காயப்படுத்திவிட்டாராம் கங்கனா ரனாவத். வீர் தாஸின் உதட்டில் ரத்தம் வந்ததால், அன்றைய படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு பின்னர் ஒருவாரம் கழித்து அதே காட்சியை மீண்டும் படமாக்கியுள்ளனர்.

ரிவால்வர் ராணி குறித்து அதன் தயாரிப்பாளர்  திக்மான்சு தூலியா ள் கூறும்போது, இந்த படம் முழுக்க முழுக்க காமெடி கலந்து ஆக்சன் திரைப்படமாக அமைந்துள்ளது என்றும் பி கிரேடு மக்களின்  எதிர்பார்ப்பை இது பூர்த்தி செய்யும் என்றும் கூறியுள்ளார்.

No comments:

Powered by Blogger.