விஷால் கொடுத்த சக்ஸஸ் பார்ட்டி !
விஷால் நடித்து, தயாரித்த நான் சிகப்பு மனிதன் படம் கடந்த வாரம் வெளியானது. அவரது முந்தைய படமான பாண்டியநாடு பெரும் வெற்றியடைந்த படம். எனவே நான் சிகப்பு மனிதன் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பின் காரணமாகவோ என்னவோ..நான் சிகப்பு மனிதன் படம் வெளியான அன்றைய தினத்தில் தமிழகம் முழுக்க உள்ள தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.
அந்த கூட்டத்தை வைத்து நான் சிகப்பு மனிதன் படம் சூப்பர்ஹிட் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் விஷால். வெற்றிப்படம் கொடுத்த மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போன விஷால் அன்று இரவே சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் உள்ள பப்புக்கு தன் நண்பர்கள் அனைவரையும் அழைத்து மாபெரும் தண்ணிப்பார்டி வைத்தார்.
நான் சிகப்பு மனிதன் படத்தின் சக்ஸஸ் பார்ட்டி என்ற பெயரில் விடியவிடிய குடியும் கூத்துமாக பார்ட்டி நடந்தது. இந்த பார்ட்டிக்காக சில லட்சங்கள் காலி பண்ணினார் விஷால்.
முதல் மூன்று நாட்கள் ஹவுஸ்ஃபுல்லாக இருந்த தியேட்டர்கள், நான்காவது நாள் முதல் திடீரென வறண்டுபோனது. கூட்டமே வரவில்லை. அதனால் அப்ஸெட்டான விஷால், அவசரப்பட்டு நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்துவிட்டோமே என்று ஃபீல் பண்ணுகிறாராம்.

No comments: