Header Ads

விஜய் சேதுபதிக்கு மீண்டும் மார்க்கெட் தலைதூக்குமா?

தென்மேற்கு பருவகாற்று திரைப்படத்தில் அறிமுகமான விஜய்சேதுபதி டாப் டக்கர் ஹீரோ பட்டியலில் இருந்து வருகிறார்.
என்னதான் விஜய் சேதுபதி பிட்ஸா, நடுவுல கொஞ்சம் பக்கத்தகாணோம்,  சூதுகவ்வும் போன்ற படங்கள் மூலமா தனது மார்க்கெட்டை டாப் டக்கரில் தூக்கி நிறுத்தினாலும், சமீபத்தில் வெளியான ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் தோல்வியில் முடிந்ததால் இந்த இரண்டு படங்களின் நிறுவனங்களும் தோல்வியை முன் வைத்து அவர் சம்பளத்தில் இருந்து பல லட்சங்களை கட் செய்துள்ளதாம்
இதையடுத்து மனம் தளராத விஜய்சேதுபதி சினிமா என்றால் அப்படி தான் என்று கூறி அடுத்தடுத்து புறம்போக்கு, மெல்லிசை, வசந்த குமாரன், இடம் பொருள் ஏவல் போன்ற படங்களில் தொடர்ந்த நடித்து வருகிறாராம்.
அதே சமயம் இந்த நான்கு படங்களுமே மீண்டும் என் மார்க்கெட்டை தூக்கிவிடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று தைரியமாக கூறியிருக்கிறாராம் விஜய் சேதுபதி.

No comments:

Powered by Blogger.