அப்பாவாக பிடிக்காது! மனம் திறந்தார் வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி - video
ஒரு அப்பாவாக இல்லாமல் ஒரு கவிஞராக தான் அப்பா வைரமுத்துவை தனக்கு பிடிக்கும் என மனம் திறந்து கூறியுள்ளார் வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி.
கோ திரைப்படத்தில் என்னமோ ஏதோ என்ற பாடல், பாண்டிய நாடு திரைப்படத்தில் ஃபை ஃபை ஃபை போன்ற பாடல்களை எழுதியவர் மதன் கார்க்கி.
சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், எந்திரன் திரைப்படத்தில் ரஜினியோட பணியாற்றி அனுபவம் பற்றி கேட்டதற்கு அப்படத்தில் பணியாற்றும் பொழுது அவரை நான் சந்தித்த தருணங்கள் என்னவோ குறைவு தான்.
ஆனாலும் இப்படத்தின் டப்பிங் செய்யும் போது அவரிடம் சேர்ந்து பணியாற்றியுள்ளேன், மேலும் படத்தின் ரிலீஸூக்கு பிறகு நான் க்ளைமேக்ஸ் காட்சியில் எழுதியிருந்த வசனம் நன்றாக இருந்தது என ரஜினி பாராட்டியதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தன் காதல் அனுபவத்தை பற்றி பகிர்ந்துகொண்ட மதன், அடுத்தடுத்த 20 க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல் வரிகள் எழுதி இருப்பதாகவும் விரைவில் அது அனைத்தும் வெளிவர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments: