திருப்பதி கோவிலில் அஜீத் மொட்டை போட்டார்: ‘வீரம்’ படம் வெற்றிக்கு பிரார்த்தனை
அஜீத்தின் ‘வீரம்’ படம் அடுத்த மாதம் 10–ந்தேதி பொங்கலையொட்டி ரிலீசாகிறது. இதில் நாயகியாக தமன்னா நடித்துள்ளார். சிவா இயக்கியுள்ளார். இவர் கார்த்தி நடித்த ‘சிறுத்தை’ படத்தை டைரக்டு செய்தவர்.
![]() |
| Ajith has tonsured his head for a change. |
இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் வரவேற்பை பெற்றது. என்ன நான் சொல்றது. என் அஜீத் பேசும் பஞ்ச் வசனம் அதில் இடம் பெற்று இருந்தது. ‘வீரம்’ பொங்கலுக்கு வருவதை தொடர்ந்து அஜீத் திருப்பதி கோவிலுக்கு சென்றார். அவருடன் டைரக்டர் சிவாவும் போய் இருந்தார்.
இருவரும் ‘வீரம்’ படம் வெற்றிக்காக கோவிலில் மொட்டை போட்டார்கள். பின்னர் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்துவிட்டு சென்னை திரும்பினார்கள்.


No comments: