Header Ads

கவர்ச்சி நடிகையை கட்டிப்புடிக்க ஏற்பாடு - இயக்குனரிடம் கட்டளையிட்ட நடிகர்

கவர்ச்சி நடிகைகள் மீது கதாநாயகன்களுக்கு கிக் இருக்கிறதோ இல்லையோ…காமெடியன்களுக்கு எப்போதுமே கவர்ச்சி நடிகைகள் மீது ஒரு ‘இது’தான். கவுண்டமணி பிஸியாக இருந்தபோது குண்டு ஷர்மிலி மீது காதல் கொண்டு திரிந்தார். 

எச்சில் கையால் காக்காய் விரட்ட மாட்டார் என்ற பெயரெடுத்திருந்த கவுண்டமணி, ஷர்மிலிக்கு லட்சக்கணக்கில் கொட்டிக் கொடுத்த சம்பவங்கள் ஏராளம்.


அவரை காலி பண்ணிவிட்டு வந்த வடிவேலு குறிப்பிட ஒரு கவர்ச்சி நடிகைகள் மீது மையம் கொள்ளாமல், பல பேருக்கு பட்டா போட்டு பணத்தை வாரி வழங்கினார். 

காமெடி என்றால் என்னவென்றே தெரியாமல் காமெடியனாக இருக்கும் கஞ்கா கருப்பு கூட, மைனா மல்லீஸ்வரி முதல் பல கவர்ச்சி நடிகைகளுடன் கும்மாளம் போட்டு வருகிறார். 


சந்தானம் மட்டும் சும்மா இருப்பாரா? இருக்கத்தான் முடியுமா? அல்லகைகள் இருக்கத்தான் விடுவார்களா? என்றென்றும் புன்னகை படத்தில் நடிக்கும்போது சந்தானத்துக்கு மூடு வந்தது. 

த்ரிஷா, ஆண்ட்ரியா இருவருடனும் ஜீவா கட்டி உருளும்போது நாம் சும்மா வேடிக்கை பார்ப்பதா? என்று நினைத்தாரோ என்னவோ, ‘எனக்கும் கட்டிப்புடி காட்சி வேண்டும்’ என்று டைரக்டர் அஹ்மதுவிடம் அன்புக்கட்டளை இட்டாராம் சந்தானம்.

 முன்னணி காமெடியன் கேட்கும்போது மறுக்க முடியுமா? சந்தானத்தின் விருப்பப்படியே கவர்ச்சி நடிகையுடன் கட்டி உருளும் காட்சியை வைத்துவிட்டாராம்.

 அந்த காட்சியில் நடித்த பிறகு சந்தானம் வெரி ஹேப்பி!

No comments:

Powered by Blogger.