Header Ads

விழா இல்லை! தல வழியில் தளபதி?


விழா எதுவும் இல்லாமல் ஜில்லா பாடல்கள் நேரடியாக கடைகளில் விற்பனைக்கு வருகிறது.

விஜய் படத்தின் பாடல் வெளியீட்டுவிழா பொதுவாக பிரமாண்டமாக நடக்கும். மாறாக அஜித் படங்களுக்கு இதுபோன்ற விழாக்கள் எடுக்கப்படுவதில்லை. 

சொந்த படத்தின் புரமோஷனுக்கும் வர மாட்டேன் என்று அஜித் கொள்கை வைத்திருப்பதால் ஹீரோவே இல்லாமல் விழாவா? என்று யாரும் விழா எடுப்பதில்லை. விஜய்க்கு இது புதுசு.

தலைவா படப் பிரச்சனைக்குப் பிறகு பேட்டிகூட விஜய் கொடுப்பதில்லை. சமீபத்தில் பிரபல பத்திரிகைகளின் நிருபர்களை அழைத்து, ப்ளீஸ்... பேட்டி மட்டும் கேட்டுராதீங்க என்று தனித்தனியே கேட்டுக் கொண்டார். 

பாடல்கள் வெளியீட்டு விழா வைத்து, அதில் யாராவது உணர்ச்சிவசப்பட்டு ஏதாவது பேசி, மீண்டும் அதிகார மையத்தை பகைத்துக் கொண்டால் தலைவாவுக்கு ஏற்பட்ட கதி ஜில்லாவுக்கும் ஏற்படும் என்ற முன்னெச்சரிக்கை காரணமாகவே விழா தவிர்க்கப்பட்டிருக்கிறது.

டிசம்பர் 21 ஆம் தேதி ஜில்லா பாடல்கள் சிடியை ரசிகர்கள் நேரடியாகவே கடைகளிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். டி.இமான் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

No comments:

Powered by Blogger.