கமலை தோற்கடித்த ஏ.ஆர்.ரஹ்மான்
உலக நாயகன் கமல்ஹாசனையே தோற்கடித்துள்ளார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.
பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகை ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் பிரபலங்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம்.
இந்தப் பத்திரிகை இந்த வருடம் வெளியிட்டுள்ள பட்டியலில் 16-ஆவது இடத்தில் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளார்.
மேலும் 33ஆவது இடத்தில் நடிகர் சூர்யாவும், 47ஆவது இடத்தில் கமல்ஹாசனும், 49வது இடத்தில் விஜய்யும் உள்ளார்.
100 பெர் கொண்ட இந்தப் பட்டியலில் ‘பாலிவுட் ஸ்டார்’ ஷாருக்கான் முதலிடத்தைப் பிடித்துக்கொண்டு சாதனை புரிந்துள்ளார்.
கமலுடன் இணைந்து நிறைய படங்களில் கலக்கிய ஸ்ரீதேவிக்கு 73வது இடம் கிடைத்துள்ளது.

No comments: