நெல்சன் மண்டேலாவின் காதலை நிராகரித்த இந்திய பெண்
தென் ஆப்பிரிக்காவின் முதல் பெண்ணாக ஒரு இந்தியர் இருந்திருக்கக்கூடிய வாய்ப்பு, நெல்சன் மண்டேலாவின் காதலை நிராகரித்ததால் ஆமினா கச்சாலாவிற்கு கிடைக்காமல் போனது.
மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் தங்கியிருந்த போது அவருடன் கருப்பினத்தவர்களுக்கு சமஉரிமை கோரும் போராட்டங்களில் பங்கேற்றவர் இந்தியரான இப்ராகீம் அஸ்வத். இவரது மகள் ஆமினா. இப்ராகீம் அஸ்வத் ஏற்படுத்திய டிரான்ஸ்வால் பிரிட்டிஷ் இந்தியன் அசோசியேஷன்தான், பின்நாட்களில் டிரான்ஸ்வால் இந்திய காங்கிரஸ் இயக்கமாக உருவெடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்காவின் முதல் கருப்பின அதிபராக 1994-ம் ஆண்டு பதவியேற்ற புரட்சியாளர் நெல்சன் மண்டேலா தன் மீது கொண்ட காதலை ஆமினா புத்தகமாக எழுதியுள்ளார். ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் பிரதிநிதியாக இந்தியாவில் அடைக்கலம் தேடிவந்த யூசப் கச்சாலியா என்பவரை ஆமினா திருமணம் செய்து கொண்டு டெல்லியில் வாழ்ந்தார்.
அதற்கு முன்னதாக தென்னாப்பிரிக்காவில் பெண்கள் இயக்கத்தின் முன்னோடியாக பல்வேறு போராட்டங்களை சந்தித்த ஆமினா கச்சாலியா, நெல்சன் மண்டேலா தன்மீது வைத்திருந்த காதலையும் அதை அவர் நிராகரித்ததையும் சுவைபட புத்தகமாக எழுதியுள்ளார்.
ஒரு முறை ஜோகனஸ்பர்க்கில் உள்ள என் வீட்டிற்கு வந்த நெல்சன் மண்டேலா, என்னை முத்தமிட்டு, என் தலைமுடியை கோதி விட்டபடி, 'நீ எவ்வளவு அழகான இளநங்கை தெரியுமா?' என்று கேட்டார். நான் கோபமாக அவரை தள்ளி விட்டேன். என் கோபத்துக்கான காரணம் என்னவென்று அவர் கேட்டார். 'நான் இளநங்கை அல்ல. நடுத்தர வயது பெண்' என்று பதில் கூறினேன்.
'சரி முதலில் இருந்து ஆரம்பிக்கலாம்' என்று கூறிய அவர், மீண்டும் ஒருமுறை என்னை முத்தமிட்டு, 'நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய் தெரியுமா வயதான பெண்ணே?' என்று என்னை கேலி செய்தார்.
மீண்டும் ஒருமுறை அவர் என் வீட்டிற்கு வந்தபோது அவருக்கு பிடித்தமான மீன் குழம்பு சமைத்து வைத்திருந்தேன். அன்றுதான், என்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்துக் கொள்ள விரும்புவதாகவும் அவர் என்னிடம் கூறி, என் சம்மதத்தை கேட்டார்.
இதற்கு மறுத்த நான், மொசாம்பியா நாட்டை சேர்ந்த கிரேசா மச்சேலுடன் அவர் திருமணம் செய்திருந்ததை நினைவுபடுத்தினேன். இதனால், வருத்தப்பட்ட அவர் உடனடியாக புறப்பட்டு விட்டார். மீன் குழம்பைப் பற்றி நினைவுபடுத்தியும் நிற்காமல் சென்று விட்டார்.
மேற்கண்டவாறு பல சுவாரஸ்யமான நினைவுகளை 'வென் ஹோப் அண்ட் ஹிஸ்ட்ரி ரைம்' (நம்பிக்கையும் வரலாறும் இணைந்து கவிதையாகும் போது) என்ற புத்தகத்தில் ஆமினா கச்சாலியா பதிவு செய்துள்ளார்.
இந்த காலகட்டத்திற்கு பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டார். இதற்கிடையில், யூசுப் கச்சாலியாவை திருமணம் செய்து கொண்ட ஆமினா, புதுடெல்லியில் வாழ்ந்து வந்தார். அவரது கணவர் 1995-ம் ஆண்டு புதுடெல்லியில் காலமானார்.
அதன் பின்னர் ஜோகனஸ்பர்கில் வாழ்ந்து வந்த ஆமினா கச்சாலியா, தனது 83-வது வயதில் கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி மரணமடைந்தார். அவரது மரணத்திற்கு பிறகு, அவரது பிள்ளைகள், ஆமினா கச்சாலியா எழுதிய புத்தகத்தை வெளியிட்டுள்ளனர்
No comments: