அவர்களை பார்த்தாவது திருந்துங்க: 'தல-தளபதி' ரசிகர்களுக்கு நடிகை அறிவுரை
ட்விட்டரில் அடித்துக் கொள்ளும் தல, தளபதி ரசிகர்களுக்கு நகைச்சுவை நடிகை வித்யுலேகா ராமன் அறிவுரை வழங்கியுள்ளார்.
அஜீத்தும், விஜய்யும் நண்பர்களாகிவிட்டனர். ஆனால் அவர்களின் ரசிகர்கள் ஒருவரையொருவர் நேரம் கிடைக்கும் போதெல்லாம் திட்டித் தீர்த்துக் கொள்கின்றனர்.
அதிலும் இந்த வார்த்தை போர் ட்விட்டரில் தான் அமோகமாக நடந்து வருகிறது
ஹேஷ்டேக்
ட்விட்டரில் விஜய் ரசிகர்கள் அவரைப் பற்றிய ஒரு ஹேஷ்டேக்கை உருவாக்கி அதை இந்தியா மற்றும் உலக அளவில் டிரெண்டாக விடுகின்றனர். இதை பார்க்கும் அஜீத் ரசிகர்கள் தங்கள் பங்குக்கு ஒரு ஹேஷ்டேக்கை உருவாக்கி அதை டிரெண்டாக விடுகின்றனர்.
குழம்பும் வெளிநாட்டவர்கள்
விஜய், அஜீத் ரசிகர்களின் ஹேஷ்டேக்குகளின் அர்த்தம் புரியாமல் சில வெளிநாட்டவர்கள் இது என்ன என்று ட்விட்டரில் கேள்வி எழுப்புகிறார்கள். ஒரு நடிகரின் படத்தை மற்றொரு நடிகரின் ரசிகர்கள் படுமோசமாக விமர்சிக்கிறார்கள்.
வித்யுலேகா ராமன்
இந்நிலையில் நடிகை வித்யுலேகா ராமன் ஹேஷ்டேக் போர் பற்றி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இது போன்று ஹேஷ்டேக் மூலம் சண்டை போடுவதால் இரண்டு நடிகர்களின் படங்களுக்கும், தமிழ் சினிமாவுக்கும் தான் நெகடிவ் பப்ளிசிட்டியாகிவிடும் என்பதை நினைவில் வைத்தக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
'தல' பிரியாணி
மங்காத்தா மற்றும் வேலாயுதம் படங்களின் படப்பிடிப்பு நடந்தபோது தல பிரியாணி சமைத்து இரண்டு படங்களின் குழுவினருக்கு அளித்தார். தளபதி அஜீத்துக்கு ஒரு வாட்சை பரிசாக அளித்தார். உங்களின் ஹீரோக்களிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள் என்று வித்யுலேகா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
No comments: