Header Ads

துப்பாக்கியுடன் வந்த நடிகர் நீது சந்திரா அதிர்ச்சி தகவல்

ஷூட்டிங் நடந்த போது துப்பாக்கியுடன் வந்த நடிகரை பார்த்து பயந்ததால் டோலிவுட் படங்களில் நடிப்பதை நிறுத்தி இருந்ததாக கூறி உள்ளார் நீது சந்திரா. 
ஆதிபகவன் படத்தில் நடித்திருப்பவர் நீது சந்திரா. இவர் தனது இணையதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: டோலிவுட் படங்களில் நடிப்பதை நிறுத்தியது ஏன் என்று கேட்கிறார்கள். சமீபத்தில் நான் நடித்த சத்யமேவ ஜெயதே என்ற படம் டி.வியில் ஒளிபரப்பானது. அதை பார்த்த போது பழைய ஞாபகம் வந்துவிட்டது. ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போது அப்படத்தில் நடித்த ராஜசேகர், கை துப்பாக்கியுடன் வந்திருந்தார். அதை கண்டு பயந்து விட்டேன். அன்று முதல் டோலிவுட் படங்களில் நடிப்பதை நிறுத்தினேன். (இவ்வாறு குறிப்பிட்டிருந்த அவர், சில மணி நேரத்தில் அந்த தகவலை இணைய தள பக்கத்தில் இருந்து நீக்கினார்.) 

மேலும் அவர் கூறும்போது, விரைவில் தெலுங்கு படங்களில் நடிக்க உள்ளேன். நாகேஸ்வர ராவ், நாகார்ஜுனா, நாக சைதன்யா நடித்திருக்கும் மனம் என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறேன். நாகார்ஜுனா நடிக்கும் மற்றொரு படத்தில் அவருடன் இணைந்து நடிக்க உள்ளேன் என்றார். 

No comments:

Powered by Blogger.