காதல் முறிவுக்கு பின் ஹன்சிகாவுடன் மீண்டும் நடிக்கும் சிம்பு
ஹன்சிகாவுடனான காதலை முறித்து விட்டதாக சமீபத்தில் சிம்பு அறிவித்தார். இருவரும் வாலு, வேட்டை மன்னன் படங்களில் ஜோடியாக நடிக்கின்றனர். படப்பிடிப்பில்தான் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் வயப்பட்டனர். பிறகு இருவருமே காதலை பகீரங்கமாக அறிவித்தார்கள். விரைவில் திருமணம் நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில்தான் காதல் முறிந்து விட்டதாக பரபரப்பு அறிவிப்பை சிம்பு வெளியிட்டார். இதை அறிவிக்கும் போது இருவரும் ஐதராபாத்தில் நடந்த வாலு படப்பிடிப்பில் இருந்தனர். அப்போதுதான் இருவரும் மனம் விட்டு பேசி பிரிய முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.
வாலு படத்தில் ஹன்சிகாவை புகழ்ந்து ஒரு பாடலையும் சிம்பு பாடி இருந்தார். ‘நயன்தாரா வேண்டாம், ஆன்ட்ரியா வேண்டாம் நீ தான் என் டார்லிங்’ என்று அந்த பாடல் வரிகள் துவங்கின. இதன் மூலம் இருவரும் நெருக்கமாக இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் பிரிந்து விட்டார்கள். இவர்கள் பிரிவுக்கு நயன்தாரா காரணம் என்கின்றனர்.
பாண்டிராஜ் இயக்கும் ஒரு படத்தில் சிம்புவும் நயன்தாராவும் இணைந்து நடிக்கின்றனர். இருவரும் சிரித்து பேசி நெருக்கமாக இருக்கும் படங்கள் வெளியாயின. இது ஹன்சிகாவுக்கு பிடிக்கவில்லை. இதனால் தகராறு ஏற்பட்டு பிரிந்துள்ளார்கள்.
வாலு படத்தில் இரண்டு பாடல் காட்சிகள் பாக்கி உள்ளன. இதை விரைவில் படமாக்க திட்டமிட்டு உள்ளனர். காதல் முறிவுக்கு பிறகு இதில் இணைந்து நடிக்கிறார்கள்

No comments: