தமிழில் வரும் சீக்ரட் ஆப் செக்ஸ்
பாலியல் விழிப்புணர்வுக்காக ‘சீக்ரட் ஆப் செக்ஸ்’ என்ற பெயரில் இந்தி படம் தயாராகி உள்ளது. இந்த படம் வடஇந்தியாவில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. வசூலையும் குவித்தது. தற்போது இப்படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு அடுத்தவாரம் தமிழகம் முழுவதும் ரிலீசாகிறது. பள்ளி செல்லும் பிராச்சியும், ரித்வியும் காதல் வயப்படுகின்றனர்.
உடல்ரீதியாகவும் இணைகிறார்கள். பிராச்சியின் சகோதரி பாலியல் மருத்துவர். ரித்விச்சின் அண்ணனும் மருத்துவர். மனரீதியான பிரச்சினைகளால் இல்லற வாழ்வில் முழுமை பெற முடியாமல் தவிக்கின்றனர். வீட்டு வேலை செய்யும் சுசீலாவும் இளம் வயதில் நிகழ்ந்த கசப்பான அனுபவத்தால் இல்லற வாழ்வில் சுகமின்றி தவிக்கிறார். இவர்கள் வாழ்வில் நடக்கும் பிரச்சினைகளும், தீர்வுகளுமே கதை.

No comments: