வசூல் சாதனை படைக்கிறது 2 ஸ்டேட்ஸ்!
சமீபத்தில் வெளியான இந்திப் படம் 2 ஸ்டேட்ஸ். பிரபல நாவலாசிரியர் சேத்தன் பகத்தின் 2 ஸ்டேட்ஸ் நாவலை அப்படியே படமாக்கி உள்ளார் அபிஷேக் வர்மன். அர்ஜுன் கபூர், ஆலியா பட் ஹீரோ ஹீரோயினாக நடித்துள்ளனர்.
தமிழ் நாட்டு பெண்ணை பஞ்சாபி இளைஞர் காதலிப்பார். இரண்டு மாநிலங்களுக்கும் இடையே உள்ள கலாச்சார, நடைமுறை வேறுபாடுகளால் இரண்டு குடும்பமும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும். தமிழ் நாட்டு பெண், பஞ்சாபி குடும்பத்தையும், பஞ்சாபி இளைஞன் தமிழ்நாட்டு குடும்பத்தையும் கன்வீன்ஸ் பண்ணி எப்படி காதலில் ஜெயிக்கிறார்கள் என்பதுதான் கதை. சில வருடங்களுக்கு முன்பு இதே சேத்தன் பகத்தின் நாவலை சுட்டு இயக்குனர் ராதாமோகன் அபியும் நானும் என்ற தமிழ் படத்தை இயக்கியது நினைவிருக்கலாம்.
சேத்தன் பகத்தின் கதை, இளம் ஹீரோயின் ஆலியா பட். படத்தில் இடம் பெற்றுள்ள ஆலியா, அர்ஜுன் கபூர் லிப் லாக் முத்தம் இவற்றால் படம் பிச்சுக்கிட்டு ஓடுது. தமிழ்நாட்டோடு தொடர்புடைய கதை என்பதால் சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டு பெரு நகரங்களிலும் படத்துக்கு நல்ல வரவேற்பு. தமிழ்நாட்டில் இதுவரை 2 கோடி வசூலித்திருப்பதாக கூறுகிறார்கள். படம் வெளியான ஒரு வாரத்தில் 40 கோடி வசூலித்துள்ளது. இது படத்தின் தயாரிப்பு பட்ஜெட்டை விட அதிகம்.

No comments: