தென்கொரியாவில் 476 பேருடன் சென்ற கப்பல் கடலில் மூழ்கியது: 2 பேர் பலி
தென் கொரியாவில் 476 பேருடன் சென்ற கப்பல் கடலில் மூழ்கியது. அதில் 2 பேர் பலியானார்கள்.
தென் கொரியாவில் தெற்கு கடலோர பகுதியில் உள்ள ஜெஜு தீவுக்கு ஒரு சொகுசு கப்பல் புறப்பட்டு சென்றது. அதில் 476 பேர் பயணம் செய்தனர். அவர்களில் 338 பேர் மாணவ– மாணவிகள்.
இந்த கப்பல் நடுக்கடலில் சென்றபோது திடீரென ஒரு பக்கம் சாய்ந்து கடலில் மூழ்கியது. அதைத்தொடர்ந்து படகில் இருந்தவர்களை கடலில் குதித்து உயிர் தப்பும்படி வலியுறுத்தப்பட்டது. எனவே, அவர்கள் கடலில் குதித்தனர்.
இதற்கிடையே, மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 34 படகுகள் மற்றும் 18 ஹெலிகாப்டர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டன.
அவர்கள் கடலில் மூழ்கிகொண்டிருந்த கப்பலில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர். 338 பள்ளி மாணவர்களும் மீட்கப்பட்டனர். ஆனால் 2 பேர் மட்டும் தண்ணீரில் மூழ்கி பலியாகினர்.
இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. அதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

No comments: