தானேயில் பெற்ற மகளை கற்பழித்த தந்தைக்கு வலைவீச்சு
தானே மேற்கு கொல்சேவாடி பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாத் மிஸ்ரா. ஆட்டோ டிரைவர். இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். அவரது மகளுக்கு 17 வயது ஆகிறது. இந்தநிலையில், நேற்று காலை அவரது மகள் காப்பூர்வாடி போலீஸ் நிலையம் வந்து, தனது தந்தைக்கு எதிராக ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், ‘‘எனது தாயார் வேலைக்கு செல்லும் நேரங்களில், என் தனிமையை பயன்படுத்தி எனது தந்தை என்னிடம் வந்து பாலியல் தொல்லை கொடுக்கிறார். இது பற்றி வெளியில் கூறினால், கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுக்கிறார்’’ என்று குறிப்பிட்டு இருந்தார். இதற்கிடையே, தனது மகள் போலீஸ் நிலையம் சென்றதை அறிந்த விஸ்வநாத் மிஸ்ரா தலைமறைவானார். புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவாக உள்ள விஸ்வநாத் மிஸ்ராவை தேடிவருகிறார்கள்.

No comments: