Header Ads

அதிர்ச்சியில் இருக்கும் சிவகார்த்திகேயன்

எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற வெற்றி படங்களில் நடித்த பின் சிவகார்த்திகேயன் மற்றும் ஹன்சிகா நடிப்பில் வெளிவந்த படம் மான் கராத்தே.
இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் சுமார் 600 தியேட்டர்களில் வெளியிடப்பட்டது.
மான் கராத்தே படத்துக்கு முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே ஐந்து நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தனவாம்.
இப்படி அதிக வசூலை தட்டிச் சென்ற மாக் கராத்தே படம் ஆறு நாட்கள் கழிந்த நிலையில் பல தியேட்டர்களில் மான் கராத்தே படத்தின் வசூல் சரிந்துள்ளதாம்.
50 முதல் 100 வரை மட்டுமே ரசிகர்கள் வருவதால் படத்தை எடுத்துவிட்டு நான் சிகப்பு மனிதன் படத்தை திரையிட உள்ளார்களாம்.
இந்த செய்தி பட தயாரிப்பாளர்களை மட்டுமில்லாமல் சிவகார்த்திகேயனையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.

No comments:

Powered by Blogger.