Header Ads

மான் கராத்தே திரை விமர்சனம்

கணினி நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் 5 நபர்கள் காடுகளில் சுற்றுலா செல்கிறார்கள். அங்கு ஒரு சித்தரை சந்திக்க, இவர்கள் விளையாட்டுதனமாக அவருடைய சக்தியை சோதித்துப்பார்க்க, ஐவரில் ஒருவருக்கு மட்டும் ஒரு வரம் தருவதாக சித்தர் கூற, சதீஷின் விருப்பமான (மிகவும் கேவலமான வரமான) ஆயுதபூஜைக்கு மறுநாள் தினத்தந்தி ‌செய்திதாள் வரவைத்து தரவேண்டும் என்ற வரத்தை நிரைவேற்றுகிறார் சித்தர்.

துறவியும் நான்கு மாதங்களுக்குப் பிறகு வரும் அந்த செய்திதாளை தந்துவிட்டு செல்கிறார். ஊழல் பிரச்சனையில் கணினி நிறுவனம் மூடப்படுகிறது என்ற செய்தியை பார்த்து திடிகிடும் இவர்கள், விளையாட்டுச் செய்திகளில் பீட்டர் என்பவர் குத்துச்சண்டையில் வென்று 2 கோடி ரூபாய் பரிசுபெருகிறார் என்ற செய்தியை படித்து அந்த பீட்டர் என்பவற்றின் ஸ்பான்ஸராக மாறி அந்த 2 கோடியை சம்பாதிக்க வேண்டும் என்று முடிவெடுத்து பீட்டரை தேடுகிறார்கள்.

ராயபுரம் பீட்டராக அறிமுகமாகும் சிவகார்த்திகேயனுக்கு குத்து சண்டை என்றால் என்னவென்றே தெரியாது, வழக்கம் போல மிகவும் சுமாராக இருக்கும் ஹீரோ, சூப்பர் பிகுரான ஹீரோயின் ஹன்சிகாவை பார்த்தவுடன் காதலில் விழுகிறார்.

இதற்கிடையில் சிவகார்த்தியை தேடி பிடித்து குத்து சண்டை போட்டியில் கலந்துக்கொள்ள வைகிறார்கள், கூடவே சிவகர்த்திகேயனுடன் ஹன்சிகாவை சேர்க்க பாடும்படுகின்றனர்.

ஹன்சிகாவுக்கு விளையாட்டில் மிகுந்த விருப்பம் ஆகையால் ஹன்சிகாவை எப்படியாவது காதலியாக வேண்டும் என்று விளையாட்டாக குத்துச்சண்டையில் கலந்துக்கொள்ள முடிவெடுத்து நகைச்சுவையாக அதற்கான வேலையில் இறங்குகிறார்.

கொஞ்சமும் நம்ப முடியாத வகையில் சிவகர்த்திகேயன் எல்லா போட்டிகளிலும் வென்று இறுதி போட்டிக்கு சென்றுவிடுகிறார். மிகவும் பிரபலமான குத்து சண்டை வீரரான கில்லர் பீட்டர் இறுதி போட்டியை சந்திக்க தயாரகும் சிவகார்த்திகேயனை போட்டியின் போதே கொல்ல போவதாக சாவல் விடுகிறார்.

சிவகர்த்திகேயன் போட்டியில் வென்றாரா, ஹன்சிகாவுடன் இணைத்தார என்பதே மீதி கதை! (ஷ்ஷ்ப்பா)

சிவகார்த்திகேயன் நடிப்பு இந்தப்படத்தில் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. குத்துச்சண்டையே தெரியாமல் போட்டியில் கலந்து கொண்டு குத்து சண்டை போட்டியையும், கோச்சையும் கிண்டலடிப்பது பார்க்க சகிக்கமுடியவில்லை

சில நடிகர்கள் ஒரு சில நல்ல படங்களில் நடித்து விட்டு, அதன்மூலம் புகழின் உச்சிக்கு சென்றுவிடுகிறார்கள். ஆனால் அந்த வெற்றிகளை தக்கவைத்து கொண்டவர்களை விரல் விட்டு என்னிவிடலாம், மற்றவர்கள் எல்லாம் புகழின் உச்சிக்கு சென்ற மயக்கத்தில் அடுத்து வரும் படங்கள் படுமொக்கைகளாக அமைந்து இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள்.

அந்த வரிசையில் தான் இப்போது சிவகார்த்திகேயன் இருக்கிறார். வருத்த படாத வாலிபர் சங்கம் மூலம் தான் கனவிலும் நினைத்திராத புகழின் உச்சிக்கு சென்ற இவர் வினியோகிஸ்தர் மற்றும் தயாரிபாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தார். ஆனால் அந்த நம்பிக்கை பொய்யாகும் விதமாக அமைந்துள்ளது மான் கராத்தே.

சிவகார்த்திகேயனை உச்ச நட்சத்திரங்களோடு இணைத்து பேசி புகழ் பாடிய தயாரிபாளர்களும் வினியொகிஸ்தர்கலும் அவரின் இந்த முதல் சருக்களிற்கு பிறகு எவ்வாறு பார்க்கபோகிறார்கள் என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ஹன்சிகா தனக்கு குடுத்த சறிவரவே செய்திருக்கிறார். படத்தில் வரும் ஹன்சிகாவின் தந்தை போல் எல்லா தந்தைகளும் இருந்தால் காதல் திருமணங்களுக்கு பிரச்சனை இருக்காது, காரணம் அவர் தன மகளை திருமணம் செய்பவருக்கு வைக்கும் போட்டி. 10 திருக்குறளை இடைவிடாமல் சொல்லவேண்டும் என்பதுதான் (சூப்பர் அப்பு).

படத்திற்கு பலம் என்றால் அது அனிருத்தின் இசை மற்றும் சுகுமாரின் ஒளிப்பதிவு.

மான் கராத்தே என்று பெயரை வைத்து குத்து சண்டையின் மகத்துவத்தை பெரிதும் அசிங்கபடுத்தி விட்டனர்.

மொத்தத்தில் மான் கராத்தே – குடுத்த பில்டப்புக்கு வொர்த் இல்ல!

No comments:

Powered by Blogger.