ஒரு கண்ணியும் மூன்று களவானிகளும் திரை விமர்சனம்
பிரம்மா மற்றும் நாரதமுனியின் உரையாடலில் தொடங்குகிறது கதை, நேரத்தின் மகத்துவத்தை பற்றி விவாதிக்கும் நாரத முனியை சிவபெருமானிடம் அழைத்து செல்கிறார் பிரம்மா. சிவன் நாரதருக்கு விதிக்கும் நேரத்திற்கும் உள்ள வேறுபாட்டை நிரூபிக்க ஒரு மனிதரை தேர்வு செய்ய சொல்ல, நாரதர் தமிழ் (அருள்நிதி) தேர்ந்தெடுக்கிறார்.
அருள்நிதி தனது காதலிக்கு திருமணம் நடக்க விருப்பதால் அவளை கடத்த திட்டமிடுகிறார்.
மூன்று வெவ்வேறு நேரத்தில் 8.59 மணி , 9 மணி மற்றும் 9.02 மணிக்கு அவர் கடத்த சென்றிருந்தால் விதியின் விளையாட்டு எப்படி மாறுபடுகிறது என்பதே கதை.
நீங்கள் மேலே படித்த வரையில் இது ஒரு மனிதரின் தனிப்பட்ட காதல் படம் என்பதை உணர முடியும், ஆனால் சிம்பு தேவன் திரைக்கதை எழுதிய விதம் ஆச்சரியமாக இருக்கிறது. உண்மையில் மூன்று பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன.
மலர் (பிந்து மாதவி) மற்றும் இசக்கி (பகவதி பெருமாள்) என இருவருடன் திட்டத்தை போட்டு அருள்நிதி செய்யும் சாகசங்களில் இயக்குனரின் நகைச்சுவை உணர்வும் புத்திசாலித்தனம் நிறையவே காணபடுகிறது.
சிம்பு தேவன் மூன்று வெவ்வேறு அத்தியாயங்களில் அருள்நிதி மற்றும் அஸ்ரிதாவின் காதல் பகுதிகள் விவரிக்கிறார்.
அருள்நிதி அவருக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை சரியாக செய்திருக்கிறார். அவரது நடிப்பில் பெருத்த முன்னேற்றத்தை காணமுடிகிறது.
பிண்டு மாதவிக்கு நிஜமாகவே நடிப்பதற்கான வாய்ப்பை இந்த படம் அளித்துள்ளது, அவரும் கட்சிதமாக கையாண்டு இருக்கிறார். பக்ஸ் என்ற பகவதியின் ஒவ்வொரு காட்சியிலும் சிரிக்க வைக்கிறார்.
சிம்பு தேவன் மிகவும் அருமையாக திரைகதையை அமைத்திருக்கிறார். சிறிது தவறு செய்தாலும் குழப்பி விடும் திரைகதையை மிகவும் சாமர்த்தியமாக கையாண்ட விதத்திற்காக அவருக்கு ஒரு சபாஷ் போடலாம்.
படத்திற்கு இசை நடராஜன் சங்கரன் பாடல்கள் சுமார் ரகம்தான் என்றாலும் பின்னணி இசையில் பின்னி எடுத்திருக்கிறார்.
கதிரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
மொத்தத்தில் ஒரு கண்ணியம் மூன்று களவானிகளும் – பொழுதுபோக்கு

No comments: