Header Ads

55 வயது தாத்தாவின் காமவெறிக்கு பலியான 6 வயது சிறுமி....

மேற்குவங்க மாநிலத்தில் உயர்சாதி வாலிபரை காதலித்த இளம்பெண்ணை பஞ்சாயத்தார் உட்பட பத்துக்கும் மேற்பட்ட வாலிபர்கள் கற்பழித்தது மாநிலத்தையே உலுக்கியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், 6 வயது சிறுமியை 55 வயது நபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு மிட்னாபூர் மாவட்டம் பெல்டா பகுதியில் இன்று தனியாக இருந்த சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த பிஸ்துபடா சிங் (55) என்பவர் நைசாகப் பேசி தனிமையான இடத்திற்குத் தூக்கிச் சென்றுள்ளார். பின்னர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பின்னர் குறித்த சிறுமி நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூற, அவர்கள் இதுபற்றி பொலிஸில் முறைப்பாடு செய்தனர். பொலிஸார் வழக்குப்பதிவு செய்து பிஸ்துபடா சிங்கை கைது செய்து விசாரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மிட்னாபூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

No comments:

Powered by Blogger.