சமந்தாவிற்கு ரகசிய திருமணமா? சூர்யா படத்திலிருந்து அதிரடி நீக்கம்?
பாணா காத்தாடியில் அறிமுகமாகி, நான் ஈ படத்தின் மூலம் பிரபலமான நடிகை சமந்தா, நீதானே என் பொன்வசந்தம், போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். தற்போது மூன்று தெலுங்கு படங்களிலும், சூர்யா ஜோடியாக லிங்குசாமி படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் பாய்ஸ் படத்தில் அறிமுகமான நடிகர் சித்தார்த்துடன் காதல் கொண்ட சமந்தா, காளகஸ்தி கோவிலுக்கு சித்தார்த் குடும்பத்துடன் சென்று வந்து பரபரப்பை ஏறபடுத்தினார்.Untitled-1 copy
ஆனாலும் சித்தார்த்துடன் காதல் இல்லை, வெறும் நட்பு மட்டுமே என்று கூறி வந்த சமந்தா, சென்ற வாரம் ஆந்திராவில் உள்ள ஒரு கோவிலில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக டோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
திருமணத்தின் அடையாளமாக இடது கையில் புதிய மோதிரம் ஒன்று அணிந்துள்ளதாகவும், தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படங்களை முடித்த பிறகு, முறைப்படி திருமணத்தை அறிவிக்கலாம் என்றும் இருப்பதாக சமந்தாவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த செய்தியால் கடும் அதிர்ச்சியடைந்துள்ள லிங்குசாமி, சமந்தாவை படத்தில் இருந்து நீக்கிவிட்டு வேறு நடிகையை ஒப்பந்தம் செய்ய அதிரடி முடிவு எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
முதலில் சமந்தாவிற்கு பதில் நஸ்ரியாவின் பெயர் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் தொப்புள் பிரச்சனையால் லிங்குசாமி அவரை ஒப்பந்தம் செய்ய தயங்கியதாகவும், தற்போது தமன்னா, மற்றும் ஹன்சிகா பரிசீலனையில் உள்ளதாகவும் லிங்குசாமியின் உதவி இயக்குனர் ஒருவர் தெரிவித்தார்.
No comments: