Header Ads

5 வருடத்துக்கு பிறகு மீண்டும் இரட்டை வேடம்-விஜய்

முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் விஜய், இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார்.‘துப்பாக்கி’ படத்தையடுத்து ஏ.ஆர்.முருகதாசுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளதாக விஜய் கூறி வந்தார். ‘ஜில்லா’ படத்தை முடித்து தற்போது முருகதாஸ் படத்துக்கு அவர் தயாராகி விட்டார். இப்படத்துக்கு ‘வாள்’ என பெயரிடப்பட உள்ளதாகவும், இரட்டை வேடத்தில் விஜய் நடிக்க உள்ளதாகவும் தெரிகிறது. கடந்த 2009ம் ஆண்டு பிரபு தேவா இயக்கத்தில் ‘வில்லு’ படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். 5 வருடத்துக்கு பிறகு மீண்டும் இப்படத்தில் இரட்டை வேடத்தில்  நடிக்கிறாராம்.



இதுபற்றி ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பில் விசாரித்தபோது அது உண்மை என்றே தெரிகிறது. சூர்யா நடித்த ‘கஜினி‘ படத்தை அவர் இயக்கியபோது அதில் வில்லன் வேடத்தில் நடித்த பிரதீப் ராவத், டபுள் ஆக்ஷனில் நடித்தார். இக்காட்சிகள் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அதுபோல் இப்படத்தில் விஜய்யின் டபுள் ஆக்ஷன் காட்சிகளும் இருக்கும் என்று பட வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆனால், படத்தின் கதை மற்றும் ரோல்கள்பற்றி முருகதாஸ் ரகசியம் காக்கிறாராம். வரும் பிப்ரவரியில் ஷூட்டிங் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஹீரோயினாக சமந்தா நடிக்கிறார்.

No comments:

Powered by Blogger.