திருமண வீட்டில் 3 சிறுமிகள் கடத்தி கொலை
திருப்பதி : ஆந்திரம் மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள டூபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி ரெட்டி, தற்போது குடும்பத்துடன் நிஜாமாபாத்தில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு கங்கஸ்தான் நகரத்தில் நடந்த உறவினர் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்டார். அவர்களுடன் ரகுபதி ரெட்டியின் பேத்திகள் சிரி (9), அக்ஷயா (6), குஷி (4) ஆகியோரும் சென்றனர்.நேற்று முன்தினம் இரவு திருமண வீட்டில் அனை வரும் தூங்கினர். நள்ளிரவில் 3 சிறுமிகளும் திடீரென காணால் போயினர். அவர்களை நரேந்திர ரெட்டி என்பவர் காரில் அழைத்து சென்றதாக சிலர் கூறினர். குழந்தைகளுக்கு அவர் சித்தப்பா ஆவார்.ரகுபதி ரெட்டி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். அப்போது, நிஜாமாபாத் அடுத்த பாசரா மேம்பாலம் அருகே நரேந்திர ரெட்டியின் கார் நிற்பதை கண்டனர்.காலை 10.30 மணிக்கு நிஜாமாத் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே எரிந்த நிலையில் 3 சிறுமிகளின் சடலம் கிடந்தன. நரேந்திர ரெட்டி தலைமறைவாகி விட்டார்.
No comments: