Header Ads

ரஜினிகிட்ட சான்ஸ் கேட்டு நிற்க மாட்டேன் : இது அனிருத்தின் கொலவெறி!

ரஜினி சார் கூப்பிட்டாக் கூட நான் அவரோட படத்துக்கு இசையமைக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார் இளம் இசையமைப்பாளர் அனிருத்.

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் டைரக்ட் செய்த 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத்.
இவர் ரஜினிக்கு நெருங்கிய சொந்தக்காரர். தொடர்ந்து எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, இரண்டாம் உலகம் என சில படங்களுக்கு மட்டுமே இசையமைத்திருக்கும் இவர் தற்போது தனுஷின் வேலையில்லா பட்டதாரி, சிவகார்த்திகேயனின் மான்கராத்தே ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்‌ஷனில் விஜய் நடிக்கும் படம், கெளதம்மேனன் டைரக்‌ஷனில் அஜீத் நடிக்கும் படம் என மெகா ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைக்கப் போகிறார்.
அதனால், இப்படி குறுகிய காலத்தில் முன்னணி இசையமைப்பாளராகி விட்ட அனிருத், அடுத்தபடியாக ரஜினியின் புதிய படத்திற்கு இசையமைப்பாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

ஆனால் இதுபற்றி அவரிடம் கேட்டால், ரஜினி சார் படத்தில் இசையமைக்க சான்ஸ் கிடைத்தால் ரொம்ப சந்தோஷப்படுவேன். ஆனால், அவர் என்னோட சொந்தக்காரர் என்பதற்காக நான் போய் அவரிடம் சான்ஸ் கேட்டு நிற்க மாட்டேன. அவர் கூப்பிட்டு கொடுத்தாலும் இசையமைக்க மாட்டேன். அவரை வைத்து படம் டைரக்ட் செய்யும் டைரக்டர் கூப்பிட்டால் தான் அந்தப்படத்துக்கு இசையமைப்பேன் என்கிறார் அனிருத்.

வேணும்னா ”ஒய் திஸ் கொலவெறி” பாட்டை பாராட்டிய பிரதமர் மன்மோகன் சிங்கை ரெகமெண்ட் பண்ணச் சொல்லவா..?

No comments:

Powered by Blogger.